பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 29.3 முயற்சிகள் யாவும் பலனளிக்காமற் போயின. அதற்கு மாருக, பிஸ்மத் நோயுற்ற இழையங்களில் விரைவாகப் படிகின்றது. எனவே, புற்றுநோயுற்ற இழையங்களை பிஸ்மத்தைக்கொண்டு சிகிச்சை செய்யும் முயற்சி வெற்றிப் பாதையில் கொண்டு செலுத்தக்கூடும். செய்முறை மருத்துவச் சிகிச்சை: ஆளுல், இந்த முயற்சிகள் யாவும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன; தூய்மையான கருத்து நில ஆராய்ச்சி யிலிருந்து (Abstract research) சோதனைகளைக்கோண்ட கண்டு பிடிப்புக்கள் ஏற்படுவதற்கு முன்னர் பல ஆண்டுகள் கடந்து செல்லக்கூடும்; அதிலிருந்து செய்முறை மருத்துவச் சிகிச்சை (Practical therapy) தோன்றுவதற்கு வாய்ப்பு எழஇடமுண்டு. போதுமான அளவு சோதிக்கப்பெறுவதற்கு முன்னர் அம் முறைகளை மானிட உடலில் பிரயோகிக்க முயலுவது மதி யற்ற செயலாகவும் முடியக்கூடும். உள்ளுறுப்புக்கள் செயற்படுவதில் ஆராய்ச்சி: செயற்கைக் கதிரியக்கப் பொருள்களின் சாத்தியப்படக் கூடிய மற்ருெரு பயன் உடலிலுள்ள உள்ளுறுப்புக்கள் செயற் படுவதில் மேற்கொள்ளப்பெறும் ஆராய்ச்சியிலாகும். மானிட உடலிலும் பிராணிகளின் உடல்களிலுமுள்ள உள்ளுறுப்புக் களுள் பல ஒரு செயலில் மட்டிலும் பங்குபெறுவதில்ல்ே; அவை சில சமயங்களில் பலசெயல்களில் பங்குகொள்கின்றன. அத்த கைய ஒர் உள்ளுறுப்பு ஊறுபடின், அதன் எச்செயல்தடைப்பட் டுள்ளது, எச்செயல் சாதாரணமாக நடைபெறுகின்றது என் பதை உறுதிப்படுத்துவது சிரமம். ஒவ்வொரு செயலும் பல் வேறு வளர் . சிதை மாற்றங்களுடன் தொடர்பு கொண் டிருப்பதால், உயிரியினுள் குறிப்பிட்ட கதிரியக்கப் பொருள் களைப் புகுத்துவது சாத்தியமாகின்றது; இப்பொருள்கள் சில செயல்களில் பங்கு கொள்ளுவதால், உயிரி அப்பொருள்களை