பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கொள்கை - 13 உள என்பது சாதாரணமாக எல்லோரும் அறிந்த செய்தியே. இப் பொருள்களை வேதியியல் தனிமங்கள் (Chemical elements) என்று வழங்கினர். இவை இன்று நாம் அறிந்துள்ள ஒரே மாதிரியான கிட்டத்தட்ட ஐந்து இலட்ச வேதியியற் கூட்டுப் பொருள்களுக்கும் (Chemical compounds) முற்றிலும் வேருனவை. வேதியியற் கூட்டுப் பொருள்களின் எண் னிக்கை அடிப்படைத் தனிமங்களின் எண்ணிக்கையைவிட, பல ஆயிரம் மடங்கு பெரியது. எனினும், இறுதியான, பிரிக்க முடியாத பொருள்களின் கூறுகள் என்று நாம் கருது வதற்குச் சிரம்மாக இருப்பதற்கேற்றவாறு, இத் தனிமங் களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. ஆயினும், இன்று நாம் அறிந்துள்ள தொண்ணுரற்ருறு தனிமங்களில் ஒரு சிலவற்றை மட்டிலுமே பாயில் அறிந்திருந்தார்; என்ரு லும், அவர் வேதியியலின் நோக்கங்களையும் செயல்களையும் முறைப்படுத்திச் சொல்லுவதில் வெற்றியடைந்தார் என்றே சொல்லலாம். அவர் சொன்னது: சடப்பொருள் எந்த அடிப்படைப் பொருள்களாலானது என்பதை வேதியியல் முறையினுல் பகுத்துப் பார்த்து அவை இன்னவை என்று அறுதியிடுவதே நாம் செய்யவேண்டியது' என்பது. எனவே, பாயில் கூறிய வேதியியல் தனிமங்கள் டெமாக்ரீட்டஸ் செப் பிய மண், காற்று, நெருப்பு, நீர் என்ற தனிமங்களின்றும் முற்றிலும் வேறுபட்டவை என்பதை நாம் அறிகின்ருேம். லெவாய்வலரின் கொள்கை: ஒரு நூற்ருண்டிற்குப் பிறகு லெவாய்ஸர்' என்பார் தோன்றினர்; இவர் ஃபிரெஞ்சு நாட்டவர். இவர்தான் நவீன வேதியியலின் உண்மைத் தந்தை யாவார். இவர் கி. பி. 1743-இல் பிறந்தார்: கி. பி. 1794-இல் ஃபிரெஞ்சுப் புரட்சிக்குப்" பலியாகித் தூக்கிலிடப்பெற்ருர். இவரது 27 Geosurrúðvá-Lavoisor. 28 & Giró53; ; litrl-G-French Revolution.