பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மூலக் கூறுகளும் அணுக்களும் (1) மூலக்கூறின் அமைப்பு இந்நூல் நுவலும் பொருள் நம் மனத்தகத்தே தெளிவுற அமையவேண்டுவதற்காக, இந்த இரண்டாவது சொற் பொழிவில், முதலில் மூலக்கூறுகளின் அமைப்பைப்பற்றியும் அதன் பிறகு அணுக்களின் அமைப்பைப்பற்றியும் விளக்க முற்படுவோம். ஒரு வெள்ளித் துண்டைக் கற்பனையில் காணுங்கள். முதலில் அதனைப் பண்படாத பொறிநுட்பக் கருவிகளால் வெட்டலாம்; அதன் பிறகு, ஓர் அரத்தைக்கொண்டு இச் சில்லுகளைக் கண்ணுக்குப் புலனுகாத நுண்ணிய துகள்களாக மாற்றலாம். ஆளுல், இச் செயல்கள் யாவும் மிகச் சிறிய பகுதித் துகள்களாக மாற்றுவதற்கு உங்களுக்குச் சிறிதும் துணை புரியா. வெள்ளித் துண்டை உங்களுடைய கையைக் கொண்டு தேய்த்தால், மிகச் சிறிய அளவு உலோகம் உங்க ளுடைய கையில் ஒட்டிக்கொள்ளும், ஆளுல், கண்ணுக்குப் புலனாகாத இச் சிறு அளவு உலோகமும் ஏராளமான எண் ணிைக்கையுள்ள வெள்ளியணுக்களைக் கொண்டுள்ளது. இறுதி யாக, வெள்ளி உருகி ஆவியாகும் வரையிலும்,-அஃதாவது, அது வாயு நிலையை அடையும் வரையிலும்-அதனைச் சூடாக் கலாம். இச் செயல் வெள்ளியை மிகச் சிறிய, இறுதியான துகள்களாக, அஃதாவது அணுக்களாக, உடைத்து விடுகின் றது. ஆயினும், பொறி மூலமாகவோ அன்றி வேதியியல்