பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அணுக்கரு பெளதிகம் செயல் மூலமாகவோ, அதனை மீண்டும் சிதைக்க முடியாது. வெள்ளி ஒரு தூய்மையான தனிமம் ஆகும். ஆனல், ஒரு துளி நீரை ஆவியாகச் செய்தால், அது நீர் அணுக்களாகச் சிதைவதில்லை. இந்த முறையில் பெறக்கூடிய மிகச் சிறிய துகள்களே, அஃதாவது நீரின் மூலக்கூறுகளே (Water molecules), மீண்டும் வேதியியல் முறைகளினல் சிதைக்கலாம். ஒரு நீரின் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒர் ஆக்ஸிஜன் அணுவும் அடங்கியுள்ளன. ஆத லின் நீர் ஒரு தனிமம் அன்று. இத்தகைய மூலக்கூறின் அமைப்பைக் குறித்து நவீன பெளதிக இயல் ஒரு திட்டமான வடிவகணிதப் படத்தை நிறுவியுள்ளது, ஹைட்ரஜன் அணு H என்ற ஒரு குறியீட்டா லும், ஆக்ஸிஜன் அணு O என்ற குறியீட்டாலும் குறிக்கப் பெறுகின்றன. இந்த இரண்டு குறியீடுகளைக் கொண்டு நீரின் மூலக்கூறுகள் அடியிற் கண்ட திட்டமிடப்பட்ட வாய்பாட் டால் காட்டப்பெறுகின்றன. o/ இங்கு மேலும் ஆராய முடியாத சில காரணங்களினால், நீரின் மூலக்கூறு படம் 1-இல் விளக்கப்படமாகக் காட்டியுள்ள வாறு ஒரு முக்கோண அமைப்பாகக் கற்பனை செய்யப்பெறு கின்றது. இந்த வரைப்படத்தில் நிழல்போன்று காட்டப் பெற்றுள்ள பகுதி அணுக்களின் சராசரி மின் ஏற்ற (Electric charge) வினியோகத்தைக் குறிப்பிடுகின்றது. இப்பொழுது தனிப்பட்ட மூலக்கூறிலிருந்து சடப்பொரு ளின் பல்வேறு நிலைகளுக்கு வருவோம். எடுத்துக்காட்டாக, மூலக்கூறிலிருந்து நீராவி, நீர், பனிக்கட்டி ஆகியவற்றைக்