பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 29 கொள்வோம். இந்தக் கட்புலக் காட்சியை இவ்வாறு விளக் கலாம்: நீராவியில் மூலக்கூறுகள் அதிகமான தூரங்களில், ஒர் ஈக்களின் கூட்டம்போல், ஒரே குழப்ப நிலையில் எல்லாத் திசைகளிலும் பறந்து சென்ற வண்ணம் உள்ளன. அவற்றின் இயக்கம் நீராவியின் வெப்ப நிலையைப் பொறுத்துள்ளது; மூலக்கூறுகள் ஒழுங்கற்ற நிலையில் இயங்குவதற்கு வெப்பம் முக்கிய காரணமாகவுள்ளது. பெரிய துகள்களாக இருந் தால், ஆற்றல்மிக்க ஒரு நுண்பெருக்கியைத் துணைக்கொண்டு பிரெளன் இயக்கம்’ என்ற இந்த இயக்கத்தை நன்ருகக் கூர்ந்து நோக்கலாம்: பொருளின் வெப்ப நிலை அதிகப்பட அதிகப்பட, இந்த இயக்கமும் தெளிவாகத் துலக்கமடையும். r لسفساتھ مسلسسنسنا ί ν. 2. * ί. }^ ఉt படம் 2 : சோற்றுப்புப் படிகத்தின் மாதிரி உருவம் திரவங்களிலும் மூலக்கூறுகள் ஒழுங்கற்ற நிலையிலுள்ளன: ஆளுல், அவை நெருக்கமாக இணைக்கப்பெற்றுள்ளன; அவை ஒன்றுக்கொன்று இணந்தே இயங்குகின்றன. ஒரு கரை யான் புற்றில் கரையான்கள் அசைந்து செல்வதை இத்துடன் ஒப்பிட்டுக் கூறலாம். பளிங்கு போன்ற ஒரு திடப் பொரு ளில் அணுக்கள், அல்லது மூலக்கூறுகள் இம்மாதிரியே இறுக்க மாகத்தான் அடைக்கப்பெற்றுள்ளன; ஆல்ை, இங்கு அவை முழுதும் ஓர் ஒழுங்கான கோலமாக அமைகின்றன. படம்-2 இந்துப்புப் (Rock salt) படிகத்தின் ஒரு மாதிரி உரு