பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அணுக்கரு பெளதிகம் எலக்ட்ரானின் மின்ஏற்றம்: இப்பொழுது நாம் மின் பருக்கைமூலம் அணு அல்லது மூலக்கூறுடன் தொடர்பு படுத்தப்பெற்ற மின் ஏற்ற அள வினைப் பற்றி-மின்னணு அல்லது எலக்ட்ரானைப்பற்றி-நம் கவனத்தைச் செலுத்துவோம். ஒரு குறிப்பிட்ட அளவு மின் ஞற்றல், அஃதாவது, F =96,520 கூலாங்கள் என்பது, 1 கிராம்-அணு அளவுள்ள ஒரு-வலுவெண் பொருளுடன் .ெ த | ட ர் பு கொண்டுள்ளது என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். ஆனால், இந்த மின் ஏற்றத் தின் அளவை அறிந்து போற்றுதல் (Appreciate) என்பது மிகவும் கடினமானது. சோதனைக் கூடத்தில் ஏதாவது ஒரு பொருளில் உண்டாக்சுக் கூடிய மின்ஏற்றத்தைவிட இது மிகவும் அதிகம் என்றே சொல்ல வேண்டும். பூமியும் சந்திர னும் தனித்தனியாக இந்த அளவு மின் ஏற்றத்தைப் பெற் றிருக்குமேயானல், அவை மிகத் தொலைவில் இருந்த போதி லும்கூட, பல நூற்றுக்கணக்கான கிலோகிராம்களின் அளவு விசையுடன் ஒன்றை யொன்று ஈர்க்கும், அல்லது விலக்கும். இந்த மின்ஏற்றம்தான் 1 கிராம்-அணு அளவு ஒரு-வலு வெண் பொருள் சுமந்து செல்லும் அளவு ஆகும். ஆளுல் 1 கிராம்-அணு, என்றும் ஒரே எண்ணிக்கையுள்ள அணுக் களைக் கொண்டிருப்பதால் (லாஷ்மிட்டு எண்), Fக்குச் சம மான மின் ஏற்றத்தை லாஷ்மிட்டு எண்ணுல் வகுத்துத் தனிப் பட்ட ஒர் ஒரு-வலுவெண் அணு சுமந்து செல்லும் மின்ஏற் றத்தைத் தீர்மானிக்கலாம்; இந்த மின்ஏற்றம் e என்பது; e= 6.1 x 10T* கூலாங்கள், அல்லது 4.8 x 10 'நிலை மின் இயல் அலகுகள்; ஆகவே, அது மிகச் சிறிய அளவாகும். மின் ற்ைறலணுவின் இந்த மின்ஏற்றமே அடிப்படை மின்ற்ைறல் குவாண்டம் என்று வழங்கப்பெறுகின்றது; ஏனெனில், எந்த மின்ஏற்றமும்-நேர் மின் ஏற்றமாயிருப்பினும் சரி, எதிர் மின்ஏற்றமாயிருப்பினும் சரி-முழு எண் மடங்கியாகவே