பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அணுக்கரு பெளதிகம் வதாகத் தெரியவில்லை. ஏனெனில், நம்முடைய முன்னறி வின்படி, அணுவின் உட்கருவினைச் சுழன்று கொண்டுள்ள ஒர் எலக்ட்ரான் ஒரு வட்ட வடிவமுள்ள அயனப்பாதை யிலோ அல்லது ஒரு நீள் வட்ட வடிவமுள்ள (Elliptical) அயனப்பாதையிலோ நீண்ட நேரம் சுழன்று கொண்டிருத்தல் முடியாது. முதலாவதாக, எலக்ட்ரான் மின்ஏற்றத்தைக் கொண்டுள்ளது; இரண்டாவதாக, அஃது அணுக்கருவினைச் சுற்றியுள்ள அயனப்பாதையில் அதிர்ந்து கொண்டுமுள்ளது. வானொலி வான் கம்பியிலுள்ள எலக்ட்ரான்களின் அதிர்வுகள் ஒரு மின் அலையை உண்டாக்குவது போலவே, அணுவில் அதிர்ந்து கொண்டிருக்கும் எலக்ட்ரானும் கதிர்வீச்சு அலையை வெளியிட வேண்டும். இதில் அந்த அலையை நாம் ஊதா.மேற்கதிர் ஒளியாக (Ultraviolet light) காணல் வேண்டும். ஆனல், இது கோள்நிலைஎலக்ட்ரானல் (Planetark electron) வெளியிடப்பட்ட ஆற்றலாக இருக்க வேண்டும்; இதன் விளைவாக சில காலம் கழிந்த பின்னர் அந்த எலக்ட் ரான் அணுக்கருவில் வீழ்ந்து அமைதி நிலையை அடைந்து விடும். எலக்ட்ரான்கள் அயனப்பாதைகளில் நிலைகுலையாமல் சுற்றிக்கொண்டுள்ள அணுவின் மாதிரி உருவம் உணர்த்தும் கருத்தின் போக்கிற்கு இப்படம் முற்றிலும் வேருக உள் ளது. ஆயினும், ஏதாவதொரு வழியில் கதிர்வீச்சுப் பிரச்சினையை நீக்கிக் கொள்ள இயலுமெனினும், ரதர்ஃபோர்டு அணுவின் மாதிரி உருவம் அணுவின் வேதியியற் பண்புகளின் நிலைப்பை யும் திட்டமான தன்மையையும் முற்றிலும் விளக்கத் தவறு கின்றது. நீல்ஸ் போரின் கருத்து: அனுவின் நிலைப்பை (Stability) ரதர்ஃபோர்டு அனு வின் மாதிரி உருவத்துடன் இணைக்கும் பிரச்சினைக்கு 1913-இல் நீல்ஸ் போர்" என்பார் தீர்வு கண்டார். போரின் 20 $svaid Gurrff-Niels Bohr.