பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 5.3 கருத்துப் போக்குகள் மாக்ஸ் பிளாங்'கின் ஒரு கொள்கையின் அடிப்படையில்அமைந்தன. 1900-இல் பிளாங்க் தன்னுடைய கதிர்வீச்சு விதியை-முதலில் முற்றுரு நிலையில் (Empirically) -அறுதியிட்டுக் கூறினர்; இவ்விதி அனுபவத்தை யொட்டி கருநிறப் பொருளின் வெப்பக் கதிர்வீச்சுக்கு விளக்கம் தந்தது". இந்த விதிக்கு ஒரு பெளதிக விளக்கம் தருவதற்கு, பின்னுல் மேற்கொள்ளப்பெற்ற முயற்சியில், பிளாங்க் இயற்கைச் செய்முறைகளில் மிகவும் நூதனமான ஒரு தொடர்பற்ற நிலையைக் கண்ணுற்ருர், தன்னுடைய கதிர் வீச்சு விதியினை முற்றிலும் இந்த வியப்பான கருதுகோளின் (Hypothesis) அடிப்படையிலேயே நிலைநிறுத்த முடியும் என் பதையும் அவர் கண்டார்; மிகச் சிறிய, கதிர்வீச்சுத் தன்மை யுள்ள துகள்களாகிய அணுக்கள் தமது அதிர்வுகளின் எல்லா ஆற்றல் அளவுகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்ள இயலாவென்பதுவும் (இதுகாறும் நாம் பெற்றுள்ள முன்னறி வின்படி,அவைபெற்றுள்ளன என்றுதான் நாம் எண்ணுவது), ஆளுல் ஒரு வரிசைக் கிரமமாகச் சில திட்டமான குறிப்பான ஆற்றல் அளவுகளைப் பெற்றுள்ளன என்பதுவும்தான் அந்தக் கருதுகோள் ஆகும். அன்றியும், வெளியிடப்பெற்ற கதிர் வீச்சில் இந்தத் தொடர்பற்ற பண்பு இருந்தது என்றும், அது காறும் அலைத்தத்துவம் என்று கருதப்பெற்ற ஒளி என்பது தனிப்பட்ட ஆற்றல் குவாண்டங்களைக் கொண்டிருத்தல் வேண்டும் எ ன் றும் கருதப்பெற்றன; பின்னுல் மேற் கொள்ளப்பெற்ற சோதனைகளும் இ வ. ற் ைற உறுதிப் படுத்தின். அலைவெண்ணக் கொண்ட ஒளி தனிப்பட்ட குவாண்டங்கள் அளவு ஆற்றலே வெளியிடுகினறது. அல்லது உட்கொள்ளுகின்றது என்றும், இந்த ஆற்றலின் அளவு 2 1 torr#siv sterriš#-Max Planck. 22 கருநிறப் பொருள் தன்மீது படும் கதிர்வீச்சினை விழுங்கி அதன் விளைவாக-கிர்க்காப் (Kirchhoff) என்பார் அறுதியிட்டுக் கூறிய ஒரு விதிப்படி-மிக ஆற்றல் வாய்ந்த கதிர்வீச்சினை வெளிப்படுத்தும்.