பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 அணுக்கரு பெளதிகம் அலைவெண்ணுடன் விகிதப் பொருத்தத்தில் அமைந்துள்ளது" என்றும் உணர்ந்தார் பிளாங்க், இந்த ஆற்றலின் அளவு hyக்குச் சமமாக இருந்தது என்றும் ஒப்புக்கோளாக (Postulate) வெளியிட்டார். h என்ற இந்த மாறிலி பிளாங் கின் மாறிலி (அட்டவணை-iஐப் பார்க்க) என்று வழங்கப் பெறுகின்றது; இந்த மாறிலி பல ஆண்டுகளாகப் பெளதிகத் துறையின் வளர்ச்சி முழுவதற்கும் அடிப்படைக்கருத்தாகவும் இருந்து வருகின்றது. அதிசயமான நிலை: ஒளியின் ஆற்றல் குவாண்டங்களே என்ற இந்தக் கொள் கையின் விளைவாக மிகவும் அதிசயமான நிலை எழுந்துள்ளது. ஒரு முறையில் சில ஒளிபற்றிய நிகழ்ச்சிகளின்படி-எ.டு. எதிர்த்தழித்தல் அல்லது தலையீடுபற்றியவை (Interference)ஒளியை அலைத்தத்துவமாகக் கொண்டால்தான் தெளிவாகப் புலனுகும் என்பது நன்ருக உணரப்பெற்றுள்ளது. மற்ருெரு முறையில், ஒளி குவாண்டங்கள்பற்றிய பொதுமைக் கருத்து வேறு நிகழ்ச்சிகளே விளக்குவதற்கு மிகவும் தேவைப்படுகின் றது. ஆனால், அது வெளிப்பரப்பில் நேர்க்கோடுகளில் செல் லும் துகள்களின் திரள்களாலானது. ஆகவே, முற்றிலும் வேறுபட்ட, அடிப்படையில் முரளுன, ஒளிபற்றிய இரண்டு கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று அறிகின்ருேம். எனவே, நாம் அலை-துகள் இருமை (Wave particle polarity) அஃதாவது, ஒளியின் அலைக்கூறு, ஒளியின் துகள்கூறு என்ற இரண்டு கூறுகளைப்பற்றி அறிகின் ருேம் 23 E=hw என்பது பிளாங்க் அமைத்த வாய்பாடு. இந்தப் பேருண்மையைக் கண்ட அறிவியல் பெரியார் செரு மானிய நாட்டில் தோன்றி, ஐன்ஸ் டைனே வெருட்டி ஒட்டிய நாசி (Nazi) கூட்டத்தோடு சேர்ந்து சிறைப்பட்டு உயிர் துறந்தார்.