பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 57 காணப்பெறும் வேற்றுமையைத் தவிர, இந்த இரண்டு ஒளிப் படங்களையும் வேறுபடுத்தி அறிய இயலாது. எலக்ட்ரானின் வியத்தகு இருமைப் பண்பைப்பற்றி எவ் விதமான ஐயத்தையும் கொள்ள இயலாது என்பதை நாம் காண்கின்ருேம். ஒரு வகையில், எலக்ட்ரான்கள் துகள்களே என்று நியாயமாகவே கருதப்பெறலாம்; ஒர் அணுவின் நொடிப்படம் பட ம்-1-இல் காட்டப்பெற்றுள்ளதைப் போலவே இருக்கும் என்றும் உறுதியாக நம்பலாம். ஆனல் மற்ருெரு வகையில், அவைகள் அலைகள் போலவும் காணப் பெறுகின்றன: அணுவின் படத்தை எடுப்பதற்கு இந்த அலை இயல்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆயினும், இதில் இப்படம் பெரும்பான்மையான கூறுகளில் வேறுபட்ட தாகவே இருக்கும். ரண்டு கூறுகளும் ஒன்றுக்கொன்று அடிப்படை: ஆறுகளும் ஒனறு of soig. நவீன பெளதிகத்துறை அலைக் கூறு, துகள் கூறு ஆகிய இரண்டையுமே பயன்படுத்திக்கொண்டு இரண்டையும் சம உரிமையுடன் கையாளுகின்றது. ஏனெனில், இரண்டையும் எவ்வெப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் அறிவோம்; அன்றியும், ஒன்றில்லாமல் மற்ருென்று நிலை பெற்றிருக்கமுடியாது என்பதும் நமக்குத் தெரியும். எனவே, அணுவைப்பற்றிய கட்புல உணர்வை அடை வது மிகக் கடினம் என்பதைக் காண்கின்ருேம்; இக்கட்டத் தில் நாம் கட்புலளுவதற்கு சாத்தியப்படக் கூடிய எல்லையை அடைந்து விட்டோம் என்பது தெளிவு. ஏற்கெனவே நாம் கண்டது போல, நாம் ஒர் அணுவைப்பற்றி உற்று நோக்கக் கூடியதெல்லாம் ஒர் ஒற்றை நொடிப் படத்தின் விளைவாக நேர்ந்ததே. ஆளுல், அத்தகைய நொடிப்படம் எலக்ட்ரா னின் அயனப் பாதையை ஒருபொழுதும் காட்டுவதில்லை: ஆணுல், அஃது அணுக்கருவையும் ஒரு குறிப்பிட்ட தருணத் தில் எலக்ட்ரானின் இருப்பிடத்தையும் காட்டுகின்றது. ஒரே இனத்தைச் சேர்ந்த வெவ்வேறு அணுக்களின் ஒளிப்படங்கள்