பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரியலும் அணுவும்

191


கூடும் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது இன்றி இயமையாதது.

உயர்ந்தவகைத் தாவரங்களும் பிராணிகளும் உயிரணுக்களின் [1] உள்ளணுவினுள் வளர்ச்சி பெறுகின்றன என்பதும், இந்த உயிரணுக்கள் நுண்ணணுப் பெருக்கி வழியாகப் பார்த்தாலும் கண்ணுக்குப் புலனாகாத அலகுகளாம் நுண்ணிய பொருள்கள் என்பதும், அவை உயிர் மின்னிகள் [2] என வழங்கப்பெறுகின்றன என்பதும் நாம் அறிந்தவையே. இக்கருத்துக்களை முதன் முதல் வெளியிட்டவர் ஆஸ்டிரிய கிறிஸ்துவ மடத்தலைவர் [3] ஒருவர். உயிரிகள் யாவும் இந்த உயிர் மின்னிகளைத் தம் பெற்றோர்களிடமிருந்து குடி வழியாகப் பெற்றுத் தம் வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு செலுத்துகின்றன என்று நமக்குத் தெரியும்.

பல்வேறு நிலையிலுள்ள ஓர் உயிர் அணுக்கோல்


படம்-29 அ
உள்ளே மணிகள் போல் காணப்பெறுபவைதாம் உயிர் மின்னிகள்

உயிரணுவின் உள்ளணுவில் இந்த உயிர் மின்னிகள் கோல் போன்ற பொருளில் மணிகள்போல் வரிசையாக அமைக்கப் பெற்றிருக்கின்றன. (படம் 29அ). இந்தக் கோல்


  1. 56.உயிரணுக்கள் - germ cell
  2. 57.உயிர் மின்னிகள் - genes
  3. 58. மடத்தலைவர்- abbot.