பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

அணுவின் ஆக்கம்


செய்கின்றன. இவ்விவரங்களை அறிந்த அறிவியலறிஞர்கள் அவற்றைத் தம் ஆராய்ச்சிகளில் பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். அமெரிக்காவில் தாவரங்களிலும், பிராணிகளிடமும், மனிதர்களிடமும் இக்குடிவழிப் பண்பு கதிர்வீச்சினால் எவ்வாறு மாறுதல் அடைகின்றது என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

உளவு காட்டும் வழி - துலக்கி ஆராய்ச்சி : கதிரியக்க ஓரிடத்தான்களைப்பற்றி முன்னர்க் கண்டோமல்லவா ? அவற்றின் துணைகொண்டு உடலின் பல்வேறு அமைப்புக்களைப்பற்றி அறிந்துகொள்ள முடிகின்றது. ஓரிடத்தான்களிடம் துப்பறியும் பண்புகள்[1] அமைந்துள்ளன. இப்பண்புகள் அவற்றை வழி-துலக்கிகளாகப் பயன்படுத்த உதவுகின்றன. கதிரியக்க ஓரிடத்தான்கள் இடைவிடாது கதிர்களை வெளிவிட்டுத் தம் இருப்பிடத்தைப் புலப்படுத்தும், கைகர் எண்-கருவிகொண்டு இவற்றை அறிந்துகொள்ளலாம். இந்த வழி-துலக்கி ஆராய்ச்சி ஆராய்ச்சியுலகில் புதிய திருப்பத்தை உண்டாக்கியிருக்கின்றது. நுண்ணணுப் பெருக்கி, தொலை நோக்கி, வானொலிப் பெட்டி போன்றவைகள் மனிதனின் பொறியுணர்வைப் பெருக்கி ஆராய்ச்சிக்குத் துணை நிற்பது போலவே, இம்முறையும் பெரிதும் பயன்படுகின்றது.

தம்முடைய உடல் செயற்படுங்கால் பல்வேறு பொருள்களைப் பயன்படுத்துகின்றன. பிசிதங்கள் என்பவை ஒரு வகை; நம் உடலில் அமினோ அமிலங்களிலிருந்து உற்பத்தியாகும் மிகச் சிக்கலான அணுத்திரளைகளைக் கொண்டவை. உயிரணுக்களில் நடைபெறும் கிரியைகளில் கடுவினையாக்கிகளா[2]கிய நுரைப்புளியங்களும் ஹார்மோன்களும்கூட பிசிதங்களே இப்பிசிதங்கள் விட்டமின்சத்துக்களைச் சேர்த்துப் பயன்படும் சேர்க்கைப் பொருள்களாக்கத் தேவைப்படுகின்றன. கார்ப்போஹைட்ரேட்டுகள்[3] என்-


  1. 83. துப்பறியும் பண்புகள் - detective qualities.
  2. 84. கடு வினையாக்கி - catalyst
  3. 85. கார்போஹைட்ரேட்டு - carbohydrate.