பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



224

அணுவின் ஆக்கம்


கழலையுள்ள இடத்தில் மட்டிலும் தீவிரமாகத் தாக்கக்கூடிய கதிர்களைச் செலுத்துவதற்குப் சில புதிய முறைகள் கண்டறியப் பெற்றுள்ளன. சில துணைக் கருவிகள் நோயாளியை மெல்லச் சுழற்றியும், சில அமைப்புக்கள் நோயாளியைச் சுற்றி வந்தும் இதை நிறைவேற்றுகின்றன. சிகாகோ மருத்துவ நிலையத்திலுள்ள இயந்திரங்களில் ஒன்று 500 இலட்சம் வோல்ட்டு-ஆற்றலுள்ள எதிர்மின்னி-ரவைகளைப் புற்றுநோய்ப் பகுதியின்மீது செலுத்துகின்றன. சுழலக் கூடிய ஒரு கோபால்ட்டு - சிகிச்சை இயந்திரத்திலிருந்து வெளிவரும் அணுக்கதிர்கள் பல இலட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிர்களுக்குச் சமமான ஆற்றலுள்ளவை. கதிரியக்கக் கிளர்ச்சியுள்ள கோபால்ட்டு-60 என்ற பொருளே ஓர் அணு உலையில் எளிதாகத் தயாரித்துக் கொள்ள முடியும்.

சுழலும் கோபால்ட்டு-60 சிகிச்சை இயந்திரம் ஒன்றினால் ஒரு நோயாளி சிகிச்சை பெறுவதை நாம் பார்க்கலாம்: ஆனால், அந்த அறையிலிருந்து காணமுடியாது. அந்த இயந்திரத்தை இயக்குபவருடன் நாம் மற்றெரு அறையிலிருந்து கொண்டு ஒன்றரை அடி கனமுள்ள ஒரு பிரத்தியேகமான சாளரத்தின் வழியே சிகிச்சை நடைபெறுவதைக் கவனிக்கலாம் ; இந்தச் சாளரம் துத்தநாக புரோமைடு73 என்ற ஒரு வேதியற் பொருளால் நிரம்பியுள்ளது. சாளரம் கதிர்களை மட்டிலும் தடுக்குமேயன்றி நம் பார்வையைத் தடுக்காது. படத்தில் (படம்-36) ஒரு நோயாளி சிகிச்சை பெறுவது காட்டப் பெற்றுள்ளது. சிகிச்சை இயந்திரந்திலுள்ள வளையம் போன்ற திறப்பில் நோயாளி ஒருவர் ஒரு டோலிமீது74 படுத்திருக்கிறார். கோபால்ட்டிலிருந்து வெளிப்படும் கதிர் கழலையின் மையத்தில் சரியாக விழுமாறு ஒரு காரைமேடை75 அவரைத் தாங்கி நிற்கிறது.

கோபால்ட்டு உள்ள பகுதி ஒரு நிமிடத்திற்கு இரண்டு தடவை வீதம் சுழலும் பொழுது, ஒரு வாளி போன்ற உருவத்


73 துத்தநாக புரோமைடு-zinc bromide. 74டோலி - streteher. 75காரைமேடை - plaster cast