பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மருத்துவத்துறையில் அணு

228


யின் வடி குழலில் சிறிதளவு கதிரியக்க ஆர்செனிக் மருந்து குத்திப் புகுத்தப் பெறுகின்றது. பலமணி நேரங்கழித்து குறியிடப்பெற்ற ஆர்செனிக் தன் இருப்பிடத்தைச் சில மின்பொலி எண் - கருவிகளின்70 மூலம் தெரிவிக்கின்றது; மூளையின் படம் ஒன்று வரைந்து அதில் ஆர்செனிக் மிகுதியாகக் குவியும் இடத்தைக் குறிக்கின்றனர். சாதாரண இழையத்தை விட கழலையால் பதிக்கப் பெற்றுள்ள இழையம் அதிகமான கதிரியக்க ஆர்செனிக்கை உட்கிரகிப்பதால், கழலையின் பருமனையும் அது உள்ள இடத்தையும் நிர்ணயிக்க முடிகிறது.

சொத்தைப் பல்71 பல்லில் சொத்தை விழுதல் உணவாலும், பாக்டீரியா என்ற கிருமிகளாலும், நெருக்கமாகப் பற்கள் அமைந்திருப்பதாலும், பற்களைச் சரியாகத் துலக்காததாலும், தூம்பிலாச் சுரப்பிகளில் நேரிடும் கோளாறுகளாலும்72, குடிவழிப் பண்பாலும் நேரிடுகிறது என்று பல காரணங்கள் கூறப் பெறுகின்றன. நல்ல பற்களின் வளர்ச்சிக்குக் கால்சியமும் பாஸ்வரமும் மிகவும் இன்றியமையாத பொருள்கள் என்று கண்டறியப் பெற்றுள்ளன. சொத்தைப் பற்களைக் குணப்படுத்துவதற்கு முன் பல் மருத்துவர்கள் பற்களில் பாஸ்வரம் எந்த அளவில் படிந்து வருகிறது என்பதையும், அது படிவதை எந்தெந்த நிகழ்ச்சிகள் பாதிக்கின்றன என்பதையும் அறிதல் வேண்டும். கதிரியக்க ஓரிடத்தான்கள் வந்த பிறகு இதை அறிவது மிக எளிதாக அமைந்துவிட்டது. கதிரியக்கக் கிளர்ச்சியுள்ளளவும் உடலுக்குத் தீங்கு பயக்காதனவும் ஆன பொருள்களை நோயாளியின் உணவுடன் கலந்து கொடுத்தால் போதுமானது. கதிரியக்கமுள்ள பாஸ்வரம் அங்குள்ள நிலையினை உளவு காட்டிவிடும்.

சிகிச்சையில் புதிய முறை : கதிரியக்கப் பொருள்களைப் பயன்படுத்துவதில் புதிய முறைகள் தோன்றியுள்ளன. நோயற்ற இழையங்கள் அதிகமாகப் பாதிக்கப் பெறாமல்


70மின்பொலி எண் கருவி -scintillating counter. 71சொத்தைப் பல் - dental caries. 72கோளாறுகள் - disorders.