பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொழில்துறையில் அணு

271


இருக்கும் மேற்படி நீர்ப்பூண்டுகளை ஒழிப்பதற்குச் சிறந்த வழிகளைக் கண்டறிய முடிந்தது.

பிறபயன்கள் : ஒர் ஆற்றுப் படுகையிலிருந்து சிப்பிகளைச்[1]23சேகரிக்கும் செம்படவர்கள் சிப்பிகளைக் கெடுக்கும் வேதியற் பொருள் அந் நீரிலுள்ளதா என்பதை அறியார். அண்மையிலுள்ள ஒரு தொழிலகத்திலிருந்து அந்த ஆற்று நீரில் கலக்கப்பெறும் வேதியற் கழிவுகளுடன் மிகச் சிறிதளவு கதிரியக்கப் பொருள்களைச் சேர்த்துவிட்டால் அவை அந்த வேதியற் பொருள்களைக் காட்டிவிடும், சிப்பிப் படுகைகளிலுள்ள நீரைக் கதிரியக்கக் கிளர்ச்சிக்குச் சோதனை செய்து கோடிக்கணக்கான பங்கு நீரில் ஒரு சில பங்கு வேதியற் கழிவு இருப்பினும் அதை எளிதாகக் கண்டறிந்துவிட முடியும்.

கொலை, களவு போன்ற குற்றங்களைக் கண்டறிவதிலும் கதிரியக்க ஓரிடத்தான்கள் துணைபுரியத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவிலுள்ள ஊர்க்காவல் துறை[2]24இவற்றைப் பயன் படுத்துகின்றது. சில வைர வியாபாரிகள் விலையுயர்ந்த கற்களுடன் கதிரியக்க ஒரிடத்தான்களை இணைத்து வைக்கின்றனர். அவை களவுபோனால் இந்த ஓரிடத்தான்கள் மூலம் அவற்றைக் கண்டுபிடிப்பது எளிதாகின்றது.

அபாயத்திலிருந்து பாதுகாப்பு : பொறிகலளை இயக்குபவர்களுக்கு அடிக்கடி நேரிடும் விபத்துக்களைப் பாதுகாக்கும் அமைப்பிலும் கதிரியக்க ஓரிடத்தான் பயன்படுகின்றது. பொறியினை இயக்குபவர் சிறிது கதிரியக்கமுள்ள கங்கணம் போன்ற ஒரு பட்டியைத் தன்கையில் கட்டிக் கொள்வார். பொறியில் கதிர்வீச்சினைக் கண்டறியும் கைகர் எண் - கருவி போன்ற அமைப்பொன்று பொருத்தப் பெற்றிருக்கும். கை விபத்துக்குள்ளாகும் எல்லைக்கு வருங்கால் கையில் அணிந்திருக்கும் பட்டியிலுள்ள கதிர்வீச்சு பொறியிலமைக்கப் பெற்றிருக்கும் கருவியில் தெரியும். இந் நிலையில் பொறியை


  1. 23சிப்பிகள் - oysters
  2. 24 ஊர்க்காவல் துறை- police department