பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத்தில் அணுவாற்றல் 8

டாகும். 1952-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புரூக் ஹேவன் தேசிய ஆய்வகத்தில் கோபால்ட்டு-60-ஐக் கொண்டு ஓர் உருளைக் கிழங்கின்மீது 20,000 ராண்ட் ஜென்கள் அளவு காமா-கதிர்களைச் செலுத்தி இச்சோதனை செய்யப்பெற்றது. கதிர்வீச்சிற்குட்படுத்தப்பெருத உருளைக் கிழங்கு முளைத்து வற்றிப்போக, கதிர்வீச்சிற்குட்படுத்தப் பெற்ற கிழங்கு அப்படியே கெடாமல் இருந்தது. இரண்டு ஆண்டுகள் வரையிலும் உருளைக்கிழங்குகள் கெடாமல் பாதுகாப்பதற்குரிய முறைகளைக் குறைந்த செலவில் காணும் திட்டங்கள் வகுக்கப் பெற்றுள்ளன. மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பெற்ற சோதனைகளினுல் வெங் காயத்தையும் அதே முறையில் சேமித்து வைக்கலாம் எனக் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு சேமித்து வைக்கப் பெறும் உணவுப் பொருள்களின் சுவையும் திருப்திகர மாகவே இருக்கின்றது.

இதே முறையினைக் கையாண்டு இறைச்சிப் பொருளே யும் பாதுகாக்கலாம் என்று ஆய்வாளர்கள் உற்சாகத்துடன் முயன்றுவருகின்றனர். இத்துறையில் பல சோதனைகளைச் செய்து மூன்று நாட்கள் அலமாரியில் 32"F சூட்டுநிலையில் வைத்திருக்கக் கூடிய மாட்டிறைச்சியைப் பதினேந்து நாட் கள்வரையிலும் வைத்திருக்கக்கூடும் என்று கண்டனர். கோபால்ட்டு-60 என்ற ஒரிடத்தானிலிருந்து வரும் காமாகதிர்களே இவ் விறைச்சியின்மீது பாய்ச்சி இம்முறை யில் வெற்றி கண்டனர். கதிர்வீசலுக்குட்படுத்துவதற்கு முன்னர் அறிவியலறிஞர்கள் சீதள அலமாரியிலிருக்கும் பொழுது மேற்படி இறைச்சியைக் கெடுக்கக் கூடிய பாக்டீரியாவைச் சிறிய அளவுகளில் அதனுள் குத்திப் புகுத் தினர். காமா-கதிர்களுக்குட்படுத்தப்பெற்ற இறைச்சி ஒருவார இறுதியில் கெட்டுப் போயிற்று. இதுவும் இது போன்ற பிற சோதனைகளும் கதிரியக்கக் கிளர்ச்சியினைப் பல்வேறுவித இறைச்சிப் பொருள்கள், மீன், சமைக்காத

  • uß3. Hæ55r L150 &850á SyIsh - Michican University. * மாட்டிறைச்சி - beef.