பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

அணுவின் ஆக்கம்


பகுதி ஆயுளை உடையவை. இத்தனை விதமான துணுக்குகள் அணுவினுள் அடங்கியிருந்தாலும் மொத்தத்தில் அணு மின்சார நடு நிலையில்” தான் இருக்கிறது. அதில் நேர் மின்னாற்றலும் எதிர் மின்னாற்றலும் ஒரே அளவில் கலந்திருக்கின்றன. அஃதாவது, நேர் மின்னூட்டம் பெற்ற நேர் இயல் மின்னியும் எதிர் மின்னூட்டம் பெற்ற எதிர் மின்னியும் எண்ணிக்கையில் சமமாக இருக்கின்றன. அணுக்களெல்லாம் சம நிலையில் இருப்பதால்தான் அவற்றைத் தொடுங்கால் தேட்கடுப்பு போன்ற அதிர்ச்சியை நாம் உணர்வதில்லை.

அணுவின் அமைப்பு : இன்றைய அறிவியலறிஞர்கள் அணுவின் அமைப்பும் அண்டத்தின் அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கின்றன என்று ஆய்வுகளால் நிரூபித்துக் காட்டி யிருக்கின்றனர். “அண்டத்தில் போலத்தான் பிண்டத்திலே” என்ற பழமொழி யொன்று நமது நாட்டில் வழங்கி வருகிறது. இந்தப் பழமொழியின் உண்மை அணு ஆராய்ச்சியின் முடிவாக இருப்பதனைக் கண்டு மகிழலாம். அறிந்த ஒன்றினைக் கொண்டுதான் அறியாததனை விளக்க வேண்டும் என்பது உளநூல் விதி; இயல்பும் அதுதானே. ‘அணு எப்படி யிருக்கிறது’? என்றால், ‘அண்டங்கள் போல’ என்போம். ‘அண்டங்கள் எப்படியோ’ என்றால், நட்சத்திரங்கள் போல் என்போம். ‘நட்சத்திரங்களின் அமைப்பு எப்படியோ’ என்றால், ‘கதிரவன் குடும்பம்போல்’ என்போம். இவ்வாறு ஒவ்வொன்றினையும் விளக்க, உவமைகள் பயன்படுகின்றன. இந்த உவமைகள் யாவும் அறிந்தவைகளாகவே இருக்கும்; அவை சொல்லுவோருக்கும் கேட்போருக்கும் மிகவும் நன்றாகத் தெரிந்தவைகளாகவே இருக்கும்.

கதிரவன் மண்டலம் : கதிரவன் குடும்பத்தில் நாம் காண்பதென்ன ? கதிரவன் நடுவில் அமைந்திருக்க அவனைச் சுற்றிப் பலப்பல மண்டலங்களில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்


மின்சார நடுநிலை - electrically neutral