பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அணுவின் ஆக்கம்ஏழு எதிரிமின்னிகளும் சுற்றி வருகின்றன. குறை நிலையில் உள்ள இந்த ஏழும் ஒன்றும், ஒன்றாகக் கூடிச்சேர்ந்ததும் எட்டு ஆகிவிடும் : புறநிலை வட்டமும் நிறைந்துவிடும். எப்படி? புறநிலை வட்டம் மறைகிறது (படம்-6).

படம் 6. சோற்றுப்பின் அமைப்பு

மின்னூட்டமே Na என்ற சோடிய அணுவையும் cல் என்ற குளோரின் அணுவையும் பற்றவைத்து Nad என்ற (சோற்றுப்பினன்} அணுத்திரளையாகச் செய்கின்றது

இவ்வாறே ஓர் அணுவின் வெளிப்புற வட்டத்தில் இரண்டு எதிர் மின்னிகளும் மறறோர் அணுவின் வெளிப்புற வட்டத்தில் ஆறும் இருந்தால், அவையும் இவ்வாறே ஒன்றாகி நிறை நிலையில் கலக்கும். எட்டு எதிர்மின்னிகளும் நிறைந்த நிலையில் அணுக்கள் முழுநிலையாகக் கிடக்கின்றன. இவை எந்தப் பொருள்களோடும் சேர்வதில்லை. இவையாவும் வைதிகர்போல் ஓர் அணுவையும் தீண்டுவதில்லை. ஹீலியம்56 நியான்57 ஆர்கான்,58 கிரிப்டான்,59


56ஹீலியம்(பரிதியம்}57நியான் {sup|58}}ஆர்கான் 59கிரிப்டான்