பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருவிலடங்கிய ஆற்றலும் தொடர்நிலை விளைவும்

67


தணிக்கப் பயன்படுகின்றன. இப்பொருள்கள் தணிப்பான்கள்22 என வழங்கப் பெறுகின்றன.

செயற்கைத் தனிமங்கள் : யு-235 ஐத் தவிர வேறு தனிமங்கள் பக்கு விடுதலில் பங்கு பெறாவிட்டால், அணுவாற்றல் தொழில் அபிவிருத்தி அடைவதற்கே வழி இராது. யு-285ன் பிளவில் மட்டிலும் அணு ஆற்றல் மிகக் குறைவாகவும் போகும்; விலையும் அதிகமாக இருக்கும். ஆனால், போர்க்காலத்தில் நடைபெற்ற ஆராய்ச்சிகளினுல் யு-235 ஐக் கொண்டு பக்குவிடும் பண்பினைக் கொண்ட, இயற்கையில் கிடைக்காத புதிய வகை யுரேனிய அணுக்களை உண்டாக்கலாம் என்று கண்டனர். ஒரு காலத்தில் புதிய தனிமங்களைப் படைத்தல் சாத்தியப்படாது என்று கருதியிருந்த எண்ணம் இன்று அணுவியலிலும் பொறியியலிலும் நடைமுறைச் செயலாகி விட்டது. இன்று புதிய தனிமங்கள் எண்ணிக்கையில் அதிகமாகவும், நூற்றுக்கணக்கான புதிய ஓரிடத்தான்களின் வகைகளும் தொடர்நில விளேவின் பயணுகச் செயற்கை முறையில் உண்டாக்கப்பெறுகின்றன. அவைகளில் புளுட்டோனியம் என்ற புதிய தனிமமும், யு-288 என்ற யுரேனியத்தின் புதிய ஓரிடத்தானும் பக்குவிடும் பண்பைப் பெற்றிருக்கின்றன. அவை இரண்டும் முக்கியமான அணு எரி பைகளாக உள்ளன.

மேலே குறிப்பிட்ட இரண்டு புதிய பொருள்களையும் ஆக்கிப் படைப்பது அவ்வளவு எளிதன்று. அது தானாகக் கிளர்ந்தெழும் யு-285-ன் அனுப்பிளவிஞல் நடைபெற வேண்டும் ; அதுவும் ஓர் அணு உலையில்23 நடைபெறுதல் வேண்டும். அணுவின் உட்கரு சிதையும்பொழுது அதினின்று உயர்ந்த வேகத்தில் பல பொது இயல் மின்னிகள் விடுவிக்கப் பெறுகின்றன. இந்தப் பொது இயல் மின்னிகள்தாம் அணுவின் உட்கரு சிதைந்தழிதலில் தீவிரமாகப் பங்கு கொள்பவை. அவற்றுள் ஒன்று அல்லது பல மின்னிகள் அருகிலுள்ள யு-285ன் உட்கருக்களைத்


22 தணிப்பான் - moderator23 அணுஉலை - reactor