பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

அணுவின் ஆக்கம்


வேதியல் மாற்றங்களே அடைந்த பிறகே உபயோகப்படுத்தம் பெறுகின்றன. யுரேனியம், தோரியம் என்ற தனிமங்களின் கனிப் பொருள்கள் மிகவும் அரியனவாய் கிடைக்கின்றன; இப் பூமண்டலத்தில் அவை கிடைக்கும் இடங்கள் ஒவ்வொன்றுக்கு மிடையேயுள்ள தூரம் மிக அதிகமாக இருக்கின்றது. தொடர்நிலை விளேவு கண்டறியப் பெறும் வரை இவ் வெரியைகள் முக்கியத்துவம் பெறவில்லை. கண்ணுடிப் பாத்திரங்களுக்கும் பீங்கான் பாத்திரங்களுக்கும் பச்சை. மஞ்சள் கலந்த பளபளப்பு2 நிறம் தருவதற்காக மட்டிலும் யுரேனியம் முக்கியமாக பயன்பட்டது; நிலக்கரி வாயுவும், நீர் வாயுவும் ஒளி தருவதற்கும் சூடு உண்டாக்குவதற்கும் சமையல் வேலைக்கும் பயன்படுத்தப்பெற்ற காலத்தில் தோரியம் ஒளிர்விடும் 'மாண்டில்'3 களில் உபயோகப்படுத் தப்பெற்றன. இந்த மாண்டில்களே வாயுச் சுவாலையில் சூடாக்கினல் அவை வெண்மை ஒளியை வீசும். இந்த இரண்டு தனிமங்களும் ஆற்றல் மூலங்கள் என்று திடீரெனக் கண்டறியப் பெற்ற காலத்தில், தூய்மையான யுரேனியம் கொஞ்சம்தான் கையிலிருந்தது; தோரியத்தின் நிலையும் அதுவே.

ரேடியத்தை உற்பத்தி செய்யும்பொழுது யுரேனியம் ஓர் உடன் விளைவுப் பொருளாகக் கண்டறியப் பெற்றது. புற்றுநோய் சிகிச்சைக்காக ரேடியம் தேவைப்படும் என்பது நமக்கு தெரியும். வலிவற்ற கதிரியக்கத்தைக் கொண்ட யுரேனிய அணுக்கள் மெதுவாகக் காரீய4 அணுக்களாக மாறுகின்றன. அவ்வாறு மாறும் படியில்தான் ரேடியம் என்பது ஒரு நிலை. அந்நிலையில் அந்த யுரேனிய அணுக்கள்-ரேடிய அணுக்கள்-மிகத் தீவிரமான கதிரியக்கத்தை யுடையனவாக இருக்கின்றன. அவை காரீய அணுக்களாக மாறுவதற்கு முன்னர் இந்நிலையிலேயே சில ஆயிரம் யாண்டுகள் கழிகின்றன. ஆகவே, ரேடியம் யுரேனிய கணிப் பொருள்களில் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றது;


2 florescent hue - பளபளப்பான நிறம். 3 மாண்டில் - mantle. கனிப்பொருள்கள் - minerals.