பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 அண்டகோள மெய்ப்பொருள். தது என்று கூறுதலானும் பரம்பொருளின் தன்மை உணரப்படும். தருதலின்=தருதலான் எ-று. தருதற்கண் எனினும் அமையும். தருதலான் ஒன்றுண்டு ஒண்சுவை தருவது என இயையும். ஈதலின், கொடுத்தலின் என்று உயர்த்தியும் தாழ்ச்சியும் தோன்றக்கூறாது கருகலின்' என ஒத்தோன் கூற்றாற் கூறியது, இறைவன் தன்னடைந்தார்க்குத் தன்னையே ஒக்க அருள் செய்தல் குறித்த தென்றுணர்க. 'விடும்பெறுத்தித் தன்மூவுலகுக்குந்தரு மொருநாயகமே' என வரும் ஆழ்வார் திவ்யஸூக்திகளால் இதனுண்மை யுணர்க .ஒருநாயகம் ஈச்வரனுடையதாதல் தெள்ளிது. தன்னொக்க அருளலால் அஃது இவனுக்காயிற்றென்று உணர்க. தன் மூவுலகு என்றதனால் ஐச்வர்யம் ஈச்வரனதாதல் தெளியலாம். ஐச்வர்யம் என்ற சொல்லே இவ்வுண்மை விளக்கும். 3. ஒன்றுண்டு ஒண்சுவை தருவது - ஒண்மையொடு கூடிய இனிமையைத் தருவது ஒன்று உள்ளது. எ-று. ஒண்மை – “ ஒளிக்கொண்ட சோதியுமா. யுடன் கூடுவ தென்று கொலோ' என்ற திருவாய்மொழியிற் கூறியரு ளியபடி, ஜ்யோதிர்மயமான முக்தஸ்வரூபத் தன்மை. ஒண்மை தருவது கூறியதால் இவ்விருக்ஷம் ஜ்யோதிர்விருக்ஷம் என்பது உய்த்துணரலாகும. சுவை - பரமஸாம்யமான நிரதிசயாநந்த ஸுகம் ஈண்டே தருவது கூறியதனால் இச்சுவை பரமஸாம்யமாதல் நன்கு துணியப்படும். : தம்மையே யொக்க வருள்செய்வர் ' எனவும் : நிரஞ்சன பரமம்ஸாம்யம் உபைதி' (நிாஜகு பநை )எனவும் போகமாத்ர ஸாம்யலிங்காச்ச' 1 திருவாய்மாழி (௩ - கo-கக.)