பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 அண்டகோள மெய்ப்பொருள்

னவள் தவறாதவள், சத்தியமுள்ளவள்' எனப் பகவான்.அருளிச்செய்தலானும் உண்மையறிக. இனி, ' கண்ணன் கழலிணை, நண்ணு மனமுடையீர் என்னும் திருநாமந், திண்ண நாரணமே (10,5, 1) என்னுந் திருவாய்மொழி எழுதிய திரு எட்டினைச் சங்கப் பலகையின்மேல் வைக்க அப்பலகை அத்திருவேட்டளவிற். சுருங்கிப் பிறர் இதனோடொக்கவிருக்க இடந்தராது இதன் தெய்வச்சிறப்புணர்த்தியது என்ற குருபரம்பரையிற் கேட்கப்படுதலான், அதற்கியைப அப்புலவர் ஆராய்ந்து நுணிய எழுதியருளிய இத்திருப்பாட்டும் அத்திருநாம மந்த்ரத்தை யும் அதைப் பயந்த பராசக்தியையும் அதற்குரிய பரதெய் வத்தையும் தலைமையாகக்கொண்ட தென்று உய்த்துணர்ந்து ← ITöᎱᏯj . பரமகாருணிகரான நம்மாழ்வாா தாம் பெற்ற பேறு எலலாப் புலவர்க்குமாமாறு, ஸகல சாஸ்த்ரார்ததங்களும அடிநிழலி னடங்கவைத்து மெய்ப்பொருள் தேற்றிய விக்தகத் தனிப்பாட்டு இஃதாகும். இங்ஙனம் வடநூற்பொரு ளையே யுடைய தமிழ்ப் பாட்டாகலின் இதனை ஆரியத் தமிழ்' என்று கூடலழகர்புராணமுடையார் கூறினா ரென்க. 'வேதப்பொருளையுடைய தமிழை வேதத் தமிழ்' என்பதுபோல இதனையுங் கொள்க. ஈயா டுவதோ கருடற் கெதிரே யிரவிக் கெதிர்மின் மினியா டுவதோ நாயா டுவதோ வுறுமிப் புலிமுன் நரிகே சரி முன் னடைய டுவதோ பேயா டுவதோ வெழிலுரர் வசிமுன் பெருமா னடிசேர் வகுளா பரணன் ஓராயிரமா மறையின் றமிழின் ஒருசொற் பொருமோ வுலகிற் கவியே ' என்பது சங்கத்தார் இவ்வரிய பாசுரத்தை வியந்து ஆழ். வார் திவ்யபிரபந்தத்தைப் புகழ்ந்துபாடிய பாட்டாகும். நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.