பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3

பெரியவை. ஆகவே, அவை மிக மெதுவாக உருகும்.

உப்பு

மற்றக் கடல்களைக் காட்டிலும் இதற்கு உப் புத் தன்மை குறைவு என்றே சொல்ல வேண்டும். நீர் ஆவியாதல் குறைந்த அளவுக்கு நடைபெறுவ தாலும், கோடையில் பனிப் பாறைகள் உருகுவ தால் வரும் நீரினாலும் இதன் உப்புத் தன்மை அதாவது கரிக்கும் தன்மை குறைவாகவே உள்ளது.

வாயுக்கள்


இதில் கரைந்துள்ள வளிகள் அல்லது வாயுக்கள் நைட்ரஜன் என்னும் உப்பு வாயுவும்; ஆக்சிஜன் என்னும் உயிர்க் காற்றும் ஆகும். இவ்வளிகள் கரைந்திருக்கும் அளவு அதிகமாக உள்ளது.

அடர்த்தி

இக்கடல் நீரில் குறைந்த வெப்ப நிலைகள் நிலவுகின்றன. ஆகவே, நீரின் அடர்த்தி அதிக மாகும்.

ஓட்டங்களும் அலை எழுச்சிகளும்

இதில் செறிவான குளிர்ந்த நீரோட்டம் ஒடுகின்றது. இதற்கு அண்டார்க்டிக் மிதப்பு நீரோட்