பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.4. அண்டார்க்டிக் பயணம்

பெயர்

காமன்வெல்த் சார்பில் அண்டார்க்டிக் கண்டத்தைக் கடப்பதற்காக ஒரு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு இனிது நிறைவேறியது. இதற்குக் காமன்வெல்த் அண்டார்க்டிக் கடப்புப் பயணம் என்று பெயர்.

காலம்

நில இயல் நூல் ஆண்டுத் திட்டத்தோடு ஒத்து அமைந்தது; ஆனால், தனியாக அமைக்கப் பட்டது; நிறைவேற்றப்பட்டது இப்பயணம். ஆகவே, இதன் காலம் 1957-58 ஆண்டுகளுக்கு இடையிலுள்ள காலம் ஆகும்.

சிறப்பு

இப்பயணம் கூட்டு முயற்சியால் நடைபெற்ற ஒரு திட்டமாகும். இதற்கு ஆங்கில நாட்டு அரசியார் புரவலராக இருந்தார். தனியார் முயற்சியாலும், பல அரசுகளின் கூட்டு முயற்சியினாலும் கடைபெற்ற பயணம் இது. இதற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் பண உதவி செய்து ஆதரித்தன. முழுப் பயணத்திற்கும் 500,000 பவுன்கள் செலவழிஙந் தது. தனியார் தொழில் நிறுவனங்களும் இதற்கு உதவி செய்தன.