பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30

தில் மிகப் பெரியது இது. அகழிகள் தோண்டி முன்னரே உருவாக்கப்பட்ட கட்டடங்கள் அதில் பொருத்தப்படும். தற்பொழுதுள்ள நிலையம் பணி அழுத்தத்தினால் அ ழிந்து கொண்டிருக்கிறது. நிலையம் அரைமைல் நீளத்திற்கு அமையும். உள் பொருத்தப்பட்ட கட்டடங்களில் விஞ்ஞான ஆராய்ச்சி செய்யலாம்.

தென்முனை நிலையம்

மற்றொரு புதிய நிலையம் தென்முனை நிலைய மாகும். தற்பொழுதுள்ள நிலையம் பழைய பயர்டு நிலையம் போலவே பனியால் சிதைந்து கொண்டு வருகிறது. கால்கள் அல்லது அகழிகள் அல்லது குகைகளில் நிலையம் அமைக்கப்படலாம். பெரும் பாலும் குகை முறையே மேற்கொன்ளப்படும். இந்நிலையம் கட்டிமுடிய இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம். இவ்விரு புதிய நிலையங் களிலும் அணுநிலையங்கள் அமைக்கப்படும்.

மக்மர்டு, புதிய பயர்டு, தென்முனை ஆகிய மூன்றும் அண்டார்க்டிகாவிலுள்ள மிகப், பெரிய நிலையங்களாகும். இவை மூன்றும் முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளன ; 3:லட்சம் சதுர மைல்களை அடைத்துக்கொண்டிருக்கின்றன.