உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
37

வளையத்தைக் கண்டத்தைச் சுற்றித் தோற்றுவிக் கின்றன.

கடல் ஒலிகள்

தென்கடலில் விலங்கு இரைச்சலின் கூச்சல் பற்றி அறிய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன, இதிலுள்ள இருண்ட நீர்களில் இந்த ஒலிகள் உருவாகின்றன. அவை சீழ்க்கை ஒலியாகவும், இரைச்சல் ஒலியாகவும், பீப் ஒலியாகவும், கீச் ஒலியாகவும் உள்ளன. இவற்றிற்கு வெடல் கடலின் சீல்களே காரணமாகும். இவை கடல் விலங்குகளாகும். டாக்டர் வில்லியம் வழிவில் திமிங்கில-சீல் ஒலி ஆராய்ச்சியில் வல்லுநர் ஆவர். செய்தி தெரி விக்கவே இவ்வொலிகளைச் சீல்கள் எழுப்புகின்றன என்று அவர் கூறுகின்றார்,

தனிக் கடலா?

திட்டமான எல்லைகள் இல்லாததால், தென் கடலைத் தனிக் கடலாகப் பிரிக்கக்கூடாது எனச் சில கடல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இக்கருத்தைச் சோவியத்துக் கடல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குள்ள தனித் தன்மைகளைச் சுட்டிக்காட்டி, அவ்வாறு செய்யக் கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். விந்தைக்குரிய இயற்கைச் செயல்கள், பனி மூட்டம், தட்பவெப்ப நிலை முதலியவை அதன் தனித் தன்மைகள் ஆகும். அண்டார்க்டிக் வளைய ஓட்டத் தின் வடபுலமே தென் கடலின் வடக்கு எல்லை களாகக் கொள்ளப்படவேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.