பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93


அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்படாமல் இருக்கச் செய்ய சில வழிமுறைகள் முன்பே கண்டறியப்பட்டிருந்தன. சீன நாட்டில் தோன்றிய ‘அக்குப்பஞ்சர்’எனும் ஊசி குத்தல் மருத்துவம் பற்றி முன்பே கூறினோம்.இம்மருத்துவ முறையில் உடலின் குறிப்பிட்ட இடங்களில் ஊசிகளைக் குத்துவதன் மூலம் அப்பகுதி மரத்துப் போகுமாறு செய்யப்படுகிறது. எவ்வித மயக்க உணர்வும் இல்லாது நோயாளி நல்ல விழிப்போடு இருக்கும் போதே தேவையான அறுவை மருத்துவம் செய்யப்படுகிறது. வலியேதும் இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு இம்முறை ஏற்றதாகக் கருதப்பட்டது.

ஆனால், மருத்துவத்துறையில் குறிப்பாக அறுவை மருத்துவத்தில் மயக்க மருந்து தருவதன் மூலம் நோயாளி நினைவிழக்கச் செய்யும் முறையை முதன்முதலில் கண்டறிந்து செயல்படுத்தி வெற்றியடைந்தவர்கள் முஸ்லிம் மருத்துவ ஆய்வாளர்கள் ஆவர். இதன்மூலம் மயக்கமுற்ற நோயாளி மன அமைதியுடன் அறுவை மருத்துவரோடு நன்கு ஒத்துழைக்க இயன்றது. நோயாளிக்கு வலியேதும் தெரியாமல் அறுவை மருத்துவம் செய்து கொள்ளவும் நன்கு முடிந்தது.

இத்துறையில் முத்திரைப் பணியாற்றி வரலாற்றில் சிறப்பிடம் பெறுபவர் அஸ்ஸஹ்ரவி ஆவார். ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த இவர் அறுவை மருத்துவ முறைகளை விளக்கும் மருத்துவத் தகவல் களஞ்சிய நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். இந்நூலுள் மனித உடலின் அமைப்பை மிகச் சிறப்பாக விளக்கிக் கூறியுள்ளார் புண்களை ஆற்றும் போதும், எதிரிகளால் பாய்ச்சப்பட்ட அம்புகளை அப்புறப்படுத்தும்போதும் சாதாரண அல்லது சிக்கலான எலும்பு முறிவை சரிப்படுத்தும்போதும் அப்பகுதிகளை மரத்துப் போகச் செய்யும் சிகிச்சை முறைகளையும் இந்நூல் விரிவாக விவரிக்கிறது. அத்துடன் புண் போன்ற