பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வர்களால் போற்றப்பட்டு வருகிறது இதில் குறிக்கப்பட்டுள்ள கண்நோய் பற்றிய அடிப்படைக் கோட்பாடு பிற்கால மருத்துவ ஆய்வாளர்களால் விரிவுபடுத்தப்பட்டன

கண் அறுவை மருத்துவ வழிகாட்டி நூல்

கண்களில் ஏற்படும் பலகையான நோய்களைப் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சை முறைகளையும் கூறுவதோடமையாது கண் நோய் மருத்துவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் விரிவாக விளக்கி அந்த லூசியாவைச் சேர்ந்த முஹம்மது அல் காஃப்கி என்பார் ஒரு நூலை எழுதியுள்ளார்.

கண் அறுவை சிகிச்சையின்போது அவர் பயன்படுத்திய பல்வேறு கருவிகளையும் இதில் குறிப்பிட்டுள்ளதோடு அவைகளைப் படமாகவும் வரைந்தளித்துள்ளார். அன்று மட்டுமல்லாது இன்றும்கூட பயனுள்ள பல தகவல்களைத் தரவல்ல கண்நோய் மருத்துவ வழிகாட்டி நூலாகவிளங்கி வருகிறது.

மயக்க மருந்து கண்டுபிடிப்பில் முதலிடம் பெற்ற முஸ்லிம்கள்

மருத்துவத் துறையில் அதிலும் குறிப்பாக அறுவை மருத்துவத்தில் மயக்க மருந்தின் இன்றியமையாமையை முதன் முதல் நன்கு உணர்ந்து, அத்தகைய மருத்துவத்திற்கான மயக்க மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்கள் முஸ்லிம்களே என்பதைஅன்றைய மருத்துவ வரலாற்றுச் செய்திகள் இன்றும் விரிவாக விளக்கிக் கூறிக் கொண்டுள்ளன