பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

றவர்கள் முஸ்லிம்களின் விஞ்ஞான முயற்சி பற்றிக்கொண்டிருந்த எண்ணங்களையும் கருத்துரைகளையும் சான்றாகக் கூறலாம். இப்னு கல்தூண் (1332-1406) தனது புகழ்பெற்ற ‘முகத்தமா’ (வரலாற்றுக்கு முன்னுரை) என்ற நூலில் கூறுகிறார்:

“பரங்கியர் நாட்டிலும், மத்திய தரைக் கடலின் வடகரைகளிலும் அறிவியல் துறைகள் ஆழ்ந்து பயிலப்படுவதாக அறிகிறோம். பல வகுப்புகளிலும் அவை விரிவாக விளக்கப்படுவதாகவும், பலர் அவை பற்றி அறிந்திருக்கிறார்கள் என்றும், அவற்றைப் பயிலும் மாணவர்கள் மிகப் பலர் என்று கூறப்படுகின்றது உண்மை நிலையாது என்பதை அல்லாஹ்வே அறிவான். ஆனால், நம்முடைய மார்க்கவியலில் இயற்பியல் முக்கியமல்ல; எனவே நாம்அதை விட்டு விடலாம்.”

இப்னு கல்தூன் போன்ற இஸ்லாமிய வரலாற்று மேதைகள் முஸ்லிம்களின் விஞ்ஞான வெற்றிகளைப் பாராட்ட முன் வராததோடு அது இஸ்லாமிய மார்க்கக் கொள்கை,கோட்பாட்டிற்கு உகந்தது அல்ல என்பதை இலைமறை காயாக பிரச்சாரம் செய்யத்தவறவில்லை இத்தகைய இஸ்லாமிய விஞ்ஞான எதிர்ப்புணர்வு பொது மக்களிடையேயும் அறிஞர்களிடையேயும் ஆட்சியினரிடையேயும் ஆர்வமின்மையையும் ஒருவிதத் தொய்வையும் புறக்கணிப்பையும் உருவாக்கி விட்டன எனலாம்.

இதன் விளைவாக முஸ்லிம்கள் விஞ்ஞானத் தொடர்பான நடவடிக்கைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் தொடங்கினர். தாங்கள் அறிவியல் துறையிலிருந்து ஒதுங்கியதோடமையாது மேலை உலகில் விரிந்து வளர்ந்து வந்த விஞ்ஞானப் போக்கோடு தங்களுக்குள்ள தொடர்புகளையும் காலப்போக்கில் துண்டித்துக் கொள்ளலாயினர். இவ்வாறு அறிவியல் துறையில் புதியன புனைந்து பேராற்றலோடு எழுந்து நின்ற மேலை உலக