பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

உரித்தாகும் எனத் துணிந்து கூறலாம். எனவே தான்,இந்நிகழ்வைப் போற்ற வந்த அறிஞர் பெர்ட்ரண்டு ரஸ்ஸல் “கிரேக்கக் கோட்பாடுகளும் அரபுச் செயல் முறைகளும் இணைந்துதான் இன்றைய நவீன அறிவியல் தோன்றியத” எனப் புகழ்ந்துள்ளது சிந்தையில் நிறுத்த வேண்டிய சிறப்புச் செய்தியாகும்.

இயந்திர நுட்பக் கருவிகள் உருவாக்கம்

கணிதவியல் வளர்ச்சியை அடியொற்றிப் பல்வேறு இயந்திரவியல் நுட்பங்கள் ஆராய்ச்சி பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படலாயின இத்தகைய இயந்திரக் கருவிகள் உருவாக்கப்பட்ட பின்னரே நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மனித சமுதாய வாழ்க்கை மின்னல் வெட்டுப்போல் வேகமும் விறுவிறுப்பும் பெற்று துரித வளர்ச்சி காணலாயின. அத்தகைய இயந்திர நுட்பக் கருவிகளில் ஒன்று சக்கரமாகும்.

மின்னல் தோன்றும் முன்னே இடியோசை கேட்கும் பின்னே

இயக்கம், ஈர்ப்பாற்றல், சக்தி, ஒளி, வெற்றிடம், ஒளியின் வேகம் வெப்பம் ஆகியவை பற்றிய விரிந்த ஆராய்ச்சி முடிவுகள் கண்டறியப்பட்டன.

ஒளியின் வேகம் வேறு; ஒலியின் வேகம் வேறு என்பதையும் முதன் முதல் காரண காரியத்தோடு கண்டறிந்து கூறியவர்கள் முஸ்லிம்களேயாவர். இவ்வாய்வின்படி வானில் இடி இடிக்கும்போது முதலில் மின்னல் ஒளிகண்ணில் படுகிறது. அதன்பிறகுதான் இடியோசை நம் காதுகளை வந்தடைகிறது. இதற்கான முறையான காரணங்களைக் கண்டறிந்து விளக்கிக் கூறியவர்கள் முஸ்லிம்