பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

உண்மையான இயந்திரவியல் துறை முழு வீச்சுடன் செயல்பட்டு புரட்சிகரமான மாற்றங்களைத் தோற்றுவிக்கலாம்யிற்று. ஓடுகின்ற நீரும் ஒரு சக்திப் பொருளாக முஸ்லிம்களால் உருமாற்றி அமைக்கப்பட்டது.

காற்று இயந்திரக் கருவி கண்டுபிடிப்பு

இதே போல காற்றாடி இயந்திரங்களும் அன்றைய முஸ்லிம்களால் வடிவமைத்து உருவாக்கப்பட்டன என்பதை கருவியியல் கண்டுபிடிப்புகளின் வரலாறு தடம் காட்டுகிறது. இயந்திர இயக்கத்தில் நீரைப் போன்றே காற்றும் ஒரு சக்தியாகப் பயன்படுத்தப்படலாயிற்று.

இருசையும் நெம்புகோலையும் கப்பித்தானையும் கண்டறிந்தவர்கள் முஸ்லிம்களே!

இன்றைய விஞ்ஞானத்தின் விரைவான வளர்ச்சிக்கு வேகமும் விறுவிறுப்பும் ஊட்டித் துரிதமான வளர்ச்சிக்கு உந்து சக்தியாயமைந்த இருசையும் நெம்புகோல் தத்துவத் அதையும் கப்பித்தான் முறையையும் முதன் முதலாகக் கண்டறிந்த பெருமைக்குச் சொந்தக்காரர்களால் விளங்குபவர்கள் முஸ்லிம்களேயாவர்.

ஊசலாடும் பெண்டுலமும் முஸ்லிம்களின் கண்டுபிடிப்பே

அன்றைய முஸ்லிம்களின் முத்திரைக் கண்டுபிடிப்பாக அமைந்தது கால அளவைக் கணக்கிடும் பெண்டுல கண்டுபிடிப்பாகும். ஊசலாடும் பெண்டுலம் கண்டறியப்பட்ட தன் விளைவாகத்தான் இன்றைய நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் கடிகார வகைகள் உருவாக வழி பிறந்தது.