பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


கொலம்பஸ் எக்கு ஆதார சுருதி முஸ்லிம் வல்லுநர்களே!

அண்மையில் அமெரிக்காவிலும், கொலம்பஸ் முதன்முதலாகக் கால் பதித்த நாடுகளிலும் கொலம்பஸின் 500-வது ஆண்டு நிறைவு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அன்றைக்கு அவரது நாடாராய்ச்சிக்கு புதுப்புது நிலப்பகுதிகளைக் கண்டறியும் முயற்சிக்கு கடவாய்வுப் பயணங்களுக்குத் தேவைப்பட்ட அனைத்து விவரங்களையும் தந்துதவியவர்கள் முஸ்லிம் அறிவியலாளர்களே என்பது வரலாற்றில் அழுந்தப் பதித்த தடயமாக உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் கடல்வழி தமது நாடாய்வுப் பயணத்தை மேற்கொள்ளுமுன் அன்றுவரை முஸ்லிம் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட பூகோள ஆய்வுகளைப் பற்றி பல ஆண்டுகள் போர்க்சுக்களில் நன்கு கற்றறிந்த பின்னரே இந்தியப் பயண முயற்சியாக அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டார் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றில் காணக்கிடக்கும் செய்தியாகும்.

திசைகாட்டிக் கருவி கண்டுபிடிப்பு

அன்றைய கடற்பயணங்களுக்கு இன்றியமையாத் தேவையாக அமைந்திருந்தது திசையறியும் திறன். அதுவரை பயணிகள் திசையறிய விண்மீன்களையும் கோள்களின் இருப்பிடத் திசையையுமே நம்பிப் பயணம் மேற்கொண்டனர். திசையறிய உதவும் ‘திசைகாட்டிக் கருவி,கண்டுபிடித்தது கடற்பயண வரலாற்றின் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. எளிதாகத் திசை அறிந்து விரைந்து கலம் செலுத்த இயன்றது. இத்தகு பெரும்பயன்