பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வேதியியல் துறைக்கு வித்தூன்றியவர்கள்

இன்று அறிவியலின் பெருங்கூறாக அமைந்துள்ள இரசாயனம் எனும் வேதியியல் வெகுவாக வளர்ந்துள்ளது.பல்வேறு உட்பிரிவுகளாகக் கிளைத்துச் செழுமையாகடி வளர்ந்து இன்றைய அறிவியல் வளர்ச்சியின் உயிர் மூச்சாகிக் கொண்டு வருகிறது. இத்தகைய வேதியியலுக்கு வலுவான அடிப்படை அமைந்த பெருமை அன்றைய முஸ்லிம் வேதியியல் விற்பன்னர்களையே சாரும். இத்துறையின் ஆரம்பகால வளச்சிக்கு கால்கோளிட்ட பெருமை நூ பிர் இப்னு ஹையான் எனும் வேதியியல் வல்லுநரையே சேர்ந்தது என்பதை வரலாறு காட்டுகிறது.

பாஷாணமும் மருந்தாகிய விந்தை

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரை மேனாட்டார் ‘கெபர்’ என்ற பெயரால் அழைக்கின்றனர். இவர் பாஷாணத்தை ஆற்றல்மிகு மருந்தாக மருத்துவத் துறையில் எப்படிப் பயன்படுத்தி, நோய் அகற்ற முடியும் என்பதை எண் பித்தவர். இவர் காலத்திலும் அதற்குப் பிறகும் பாஷாணமும் ஒருவகை மருந்தாகக் கையாளப்பட்டது.இன்று பாம்பு விஷப் பொருட்களும் பாஷாணங்களும் உயிர் காக்கும் மருந்துப் பொருட்களாகப் பயன்பட்டு வருவதைக் காணலாம்.

முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை போன்ற விசேஷ நாட்களில் கண்களில் 'சுர்மா' இட்டுக் கொள்கிறார்கள் இது ஒரு சுன்னத்தான செயலாகவும் கருதப்படுகிறது. இந்தச் சுர்மாவைத் தரும் அஞ்சணக் கல்லை முதன் முதலில் கண்டறிந்தவர் ஜாபிர் இப்னு ஹையானே ஆவார்.