பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அவை அமைந்தன. இத்துறையில் எழுந்த முதல் முழுமையான நூல்கள் எனும் சிறப்பை இந்நூல்கள் பெற்றன.

இரசவாதக் கலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரபி மொழியிலிருந்து இந்நூல்கள் லத்தீன் மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டன. பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டுவரை இந்நூல்களே ஐரோப்பாவெங்கணும் இருந்த பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக அமைந்திருந்தன என்பது இந்நூல்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.

இவரைப் போன்றே இன்னும் சிலரும் வேதியியல் துறையின் விற்பன்னர்களாக விளங்கி இத்துறையின் உன்னத வளர்ச்சிக்கு உழைத்துள்ளார்கள் என்பதை வரலாற்றில் விரிவாகக் காணமுடிகிறது. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்குபவர்கள் காலித் இப்னுவலீது என்பவரும் இமாம் அல் சாதிக் என்பவரும் ஆவர்.

இன்றைய வேதிப் பொருட்களில் மிக முக்கியத்துவ முடையனவாக உள்ள ஒரு சில பொருட்களில் சிறப்பிடம் பெறுவன பொட்டாசியம் நைட்ரேட் நைட்ரிக் ஆசிட் மற்றும் சல்ஃபூரிக் ஆசிட் ஆகியனவாகும். இலைகளின் கூட்டால் பல்வேறு புதுப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மூன்று வேதிப் பொருட்களையும் உருவாக்குவதற்கான விதிமுறைகளை முதன் முதல் ஆய்ந்து கண்டவர்கள் இவர்கள் இருவருமே ஆவர். இவர்களின் வழி முறைகளின் அடிப்படையிலே நவீன உத்திகளைக் கையாண்டு இவ்வேதிப் பொருட்கள் இன்று பெருமளவில் உருவாக்கிப் பயன்படுத்தப்படுகின்றன.

பாஷாணத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்த முடியும் என்பதை எண்பித்த ஜாபிர் இப்னு ஹையானைப் பின்பற்றி வேறு சில முஸ்லிம் வேதியியல் ஆய்வாளர்கள்