பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பற்றி விரிவாக நூல் எழுதி, பின்னர் அதை மேலை உலகும் முதன்முறையாக அறியச் செய்த மேதையாவார்.சம காலத்தவர்களான அல்-பிரூனி, இப்னு சினா,பற்றிச் சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்வது முஸ்லிம்களின் அறிவியல் வளர்ச்சிப் பங்களிப்பைத் தெளிவாகப் புரிந்து கொள்ள மேலும் வாய்ப்பாக அமையும்.

இவர்கள் இருவரும் சம கால மேதைகளாகத் திகழ்ந்த போதிலும் அல்-பிரூனி வயதில் சற்று மூத்தவராகவும் இப்னு சினா இளைஞராகவும் இருந்தனர். அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி அவ்வப்போது இவர்கள் விவாதங்கள் உலகப்புகழ் பெற்றவைகளாகும்.

அல் - பிரூனி அவர் காலத்திய அறிஞர்களினின்றும் சற்று மாறுபட்டவராக விளங்கினார் தூர நோக்குப் படைத்த அறிவியல் சிந்தனையாளராகத் திகழ்ந்தார். புதுவை நாட்டம் மிக்கவரான அல் பிரூனியின் கண்டுபிடிப்புகள் மற்றவர்கட்குப் புதுமையான தாகவும் புதிராகவும் புரிந்து கொள்ள இயலாததாகவும் கூட இருந்ததுண்டு

அக்கால முஸ்லிம்களிலேயே இந்தியாவுடன் மிக அதிகத் தொடர்புடையவராக விளங்கியவர் அல்-பிரூனியே யாவார். இந்தியாவை மிக அதிகமாக அறிந்திருந்தவரும் இவரேயாவார்.

‘சதுரங்கம்’ விளையாட்டின் தாயகம் இந்தியா

அல் - பிரூனியின் காலத்தில் அராபிய, பாரசீக இலக்கியங்கள் இந்தியாவைப் பற்றி மர்மங்களும் அதிசயங்களும் நிறைந்த நாடாகச் சித்திரித்து வந்தன. ‘கணிதப் புலமையும் வானவியலறிவும் மிக்கவர்கள் இந்தியர்கள்’ எனப் பெருமையாகப் பேசின. அக்கால முஸ்லிம்களிடையே