பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


132 அண்ணல் அநுமன்

மசூதி எழுப்பப்பெற்றதாக வரலாறு. மசூதியின் ஒரு பகுதி இராமன் பிறந்த இடம் எனக் காட்டப்பெறுகின்றது. அம்மி, ஆட்டுக்கல், மருந்தரைக்கும் கல்வம் போன்ற அடையாளங்கள் அங்கு வைக்கப்பெற்றுள்ளன. அவை யெல்லாம் பிற்காலத்தில் இஸ்லாமியர் பழைய கோயிலை இடித்த பிறகு வைக்கப்பெற்றவை. அவ்விடமே இன்று இராம சன்ம பூமி - பாபர் மசூதி என்ற பிரச்சினைக்குரிய இடமாகும். (2) இம்மசூதிக்கு அருகில், சரயு நதிக்கரையில், தென்னிந்திய பாணியில் அம்மாஜி மந்திர் என்ற ஒரு புதிய கோயில் கட்டப்பெற்றுள்ளது. அங்கு இராமன், பிராட்டி, தம்பியர், சிறிய திருவடி சூழ மகுடம் சூட்டிய திருக்கோலத் தில் காட்சி அளிக்கின்றான். கோயில் மிகத் துய்மையாக வைக்கப்பெற்றுள்ளது. மூர்த்தியின் திருக்கோலம் கைபுனைந்தியற்றிய கவின்பெறு வனப்பெல்லாம் திரண்டு அமைந்துள்ளது; கண்டாரை ஈர்க்கவல்ல பெற்றியுடன் திகழ்கின்றது. நாமும் இராமனின் முடி சூட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளோம் என்ற மனநிலையைக் கொள்ளுகின்றோம்.

(3) குப்தர் படித்துறை : இத்திருக்கோயிலிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில், சரயு நதியில் 'குப்தர் படித்துறை உள்ளது. இராமன் சரயு நதியில் மூழ்கித் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளிய இடம் இதுதான் என்று சொல்லுகின்றனர். அந்த இடத்திற்கு வந்ததும் ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்டவர்களுக்கு

"அன்றுசரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி

அடலரவப் பகையேறி அசுரர் தம்மை வென்றிலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற விண்முழுதும் எதிர்வரத்தன் தாமம் மேவி"

(சரம் - இயங்கு திணை, அசரம் - நிலைத்திணை,

விண் முழுதும் - பரமபதத்திலுள்ளவர்கள் அனைவரும்: தாமம் - இடம்)

3. பெரு.திரு. 10 : 1.0