பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராமபக்தன் 133

என்னும் குலசேகரப்பெருமாளின் திருமொழிப்பகுதி மனத்தில் எழும். இந்நிலையில் முத்தராக, வைகுந்தத்திற்குச் செல்லும் அநுபவத்தையும் பெறச்செய்யும்.

இந்த இடத்தில்தான் இராமன் தன்னைச் சார்ந்தோர்கள் அனைவரையும் வைகுந்தத்திற்கு இட்டுச் சென்றான் என்பது மரபான நம்பிக்கை. அப்பொழுது அநுமன் அங்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும், இப்பூவுலகி லிருந்துகொண்டே ஒழிவில் காலமெல்லாம் இராமனின் புகழ் பரப்பிவர உறுதி கொண்டதாகவும், அந்த அநுமனே பசனை நடைபெறும் இடங்களிலெல்லாம் கோமாளியாக பக்திப் பெருக்கில் திளைக்கின்றான் என்பதும் மற்றொரு மரபு வழி நம்பிக்கை

(4) அநுமான் தேக்ரி : சரயு நதிக்கரையில் பிறிதோர் இடத்தில் 'அநுமான் தேக்ரி என்று வழங்கப்பெறும் 'ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் சிறிய திருவடி பேருருவம் கொண்டவர். தலைப்பகுதி மட்டிலும் வெளியில் தெரியுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதனைக் காணுங்கால், அநுமன் அசோக வனத்திலும் பிற இடங்களிலும் கொண்ட பேருருவம் நினைவிற்கு வரும் இத்திருக்கோயிலெங்கும் இராமபக்தர்கள் துளசி இராமாயணத்தை ஒதியவண்ணம் உள்ளனர். தாம் கோரிய யாவற்றையும் அளிக்க வல்லவன் மாருதி என்ற நினைப்பில் இச்சீரிய பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஆண்டவன் வழிபாடும் அடியார் வழிபாடும் இணைந்து நடைபெற்று வருகின்றன.

இந்த வரலாறுகளையெல்லாம் அறிந்துகொண்ட நிலையில், கம்பன் காட்டும் அநுமனின் இராம பக்தியைக் காண முற்படுவோம்.

(1) இராமலக்குமணர்களை முதன் முதல் கண்டவுடன், அவர்களை நெருங்கிப் பேசுவதற்கு முன்னதாகவே

"அன்பினன் உருகு கின்ற

உள்ளத்தன் ஆர்வத் தோரை முன்பிரிந் தனையர் தம்மை

முன்னினான் என்ன நின்றான்.'

4. கிட்கிந்தை - அதுமப் - 11