பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 அண்ணல் அநுமன்

அவனது வால் சென்ற இடத்தில் இராவணனது கோல் செல்லாது; அவ்விராக்கதனது வெற்றியும் செல்லாது (41)" அவன் இடம்விட்டு எழுவானாயின் பெரிய மேரு முதலிய மலைகள் எல்லாம் வேரோடும் இடம்விட்டுப் பெயர்ந்து போகும்; அவனுடைய பெரிய தோள்களால் பெரிய மேகமும் ஆகாயமும் இருசுடர்களும் பர்வதங்களும் மறைந்து போய்விடும் (42). பூமியைக் கோட்டால் குத்தி எடுத்த ஆதிவராகத்தையும், மந்தர மலையைத் தாங்கி நின்ற கூர்மத்தையும் தனக்கு ஒப்பாகக் கொண்டுள்ளவன்; இரணியனது மார்பைக் கீண்ட நரசிங்கமானாலும் அவனது மார்பை எதிர்க்கவல்லதோ?(43), ஒரிடத்தில் இருந்து கொண்டு பூமியைத் தாங்கும் ஆதிசேடனும் வாலி நடந்து செல்லும்போது அவனது உடற்பொறையைத் தாங்க முடியாமல் பூமி குழிந்து அழுந்த, பூமி பிளந்திடுமோ என்று அஞ்சித் தானும் இடம் பெயர்ந்து அவனுடனே சென்று கொண்டே தாங்கி வருவன் (44).

"இடைவிடாமல் கடல் ஒலிப்பதும், காற்று சஞ்சரிப்பதும், அருக்கர் தேர்மீது செல்வதும், அவன் (வாலி) சினத்திடுவான் என்ற அச்சத்தினால் அல்லாமல் வேறொரு வகையால் ஆவனவோ? (45). வள்ளலே, வாலி வாழும்போது, அவன் அநுமதியின்றி உயிரைக் கொண்டுபோதற்கு யமனும் அஞ்சலால், மகா மேருவையும் புரட்டிடவல்ல தோள் வலிமையுடைய எழுபது வெள்ள வானரச் சேனைகள்

12. இவ்விடத்தில் 'மாருதி அல்லனாகில் நீ எனும் மாற்றம் பெற்றேன் என்று பெருமித மனநிறைவுடன் செல்லும் அங்கதன் இராவணனுக்குப் படர்க்கையில் தன்னை வாலியின் மைந்தன் என்று கூறும்போது வரும்,

"இந்திரன் செம்மல் பண்டுஓர்

இராவணன் என்கின் றானைச் கத்தரத் தோள்க ளோடும்

வாலியைத் துரங்கச் சுற்றிச் சித்துரக் கிரிகள் தாவித்

திரிந்தனன் தேவர் உண்ண மந்தரப் பொருப்பால் வேலை

கலக்கினான் மைந்தன் என்றான்."

(யுத்த அங்கதன். துனது 24) என்ற பாடலை தினைவுகூர்த்து மகிழ்ந்து அனுபவிக்கலாம்.