பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சொல்லின் செல்வன் 29

அழிவில்லாமல் வாழ்கின்றன (46), வாலியின் சினத்தால் தமக்கு அழிவு நேரிடுமே என்று அஞ்சுதலால், அவன் வாழும் இடத்திற்கு நேராக மேகங்கள் இடிக்கமாட்டா குகையில் உள்ள சிங்கங்களும் கர்ச்சிக்கமாட்டா, காற்றும் அங்குள்ள மெல்லிய இலைகளும் உதிரும்படியாக வீசாது (47) அவன் இராவணனை வாலினாற் கட்டி அலட்சியமாகத் தூக்கிக் கொண்டு எல்லா உலகங்களிலும் தாவித்தாவிச் சென்றபோது அவன் சென்ற இடங்களிலெல்லாம் அவ்வரக்கனது குருதிப் பெருக்கு சொரிந்துகொண்டே இருந்தது (48).

"வலிமையுடையவனே, வாலி தேவேந்திரனின் தப்பில்லாத புதல்வன்; முழு மதியம் விளங்கினாற்போன்ற வெண்ணிறத்தையுடையவன்; யமனுக்கும் கடப்பதற்கு அரிய ஆணையுடையவன். ஒரே தாய் வயிற்றில் சுக்கிரீவனுக்கு முன் தமையனாகப் பிறந்தவன் (49). வாலி அரசனாகவும், சுக்கிரீவன் இளவரசாகவும் இருந்து வந்த நாளில் எங்கள் கூட்டத்துக்குப் பகைவனான மாயாவி என்ற ஒர் அசுரன் எதிர்த்துப் போர் செய்தான் (50). அவ்வாலியோடு போர் செய்ய முடியாமல் பின்வாங்கிய அந்த அசுரன் இப்பூமண்டலத்தில் இருந்தால் வாலி தவறாமல் தன்னைக் கொல்வான் என்று கருதிப் பாதாள லோகத்தில் ஒளிப்பதற்காகப் பாய்ந்து செல்லுவதற்கு அருமையான பூமியின் கீழுள்ள பெரும் பிலத்தினுள் (பிலம் - துவாரம்) சென்றான் (51). மாயாவி பிலத்தினுட் புக்கதைக் கண்டு வாலி பெருஞ்சீற்றம் கொண்டு, தன் இளவலாகிய சுக்கிரீவனைக் காவல் வைத்து, விரைந்து மாயாவியைத் தொடர்ந்து சென்றனன் (52), பிலத்தினுட் சென்ற வாலி அசுரனைத் தேடுதல், தேடிக் கண்டறிதல், போர் செய்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு இருபத்தெட்டுத் திங்கள் வரையிலும் வெளிவராததனால், காவல் காத்து நின்ற சுக்கிரீவன் வாலிக்கு என்ன அபாயம் நேர்ந்ததோ? என்று அஞ்சிக் கலங்கினன் (53).

"எழுதத் தக்க வெற்றியையுடையவனே, நெடுநாள் கழிந்தும் வாலி மீண்டுவராததால் இச்சுக்கிரீவன் கலங்கி நிற்க, நாங்கள் அவனைத் தேற்றி இளவரசாகிய நீயே வாலிக்குப் பின் அரசு புரியவேண்டும் என்று வற்புறுத்திக் கூறவும், அவன் அதனைத் தடுத்துக் கூறலாயினன் (54). நானும்