பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வன் 35

(7) இலக்குவன் சீற்றம் தணிந்தபின் அநுமன் அருகில் வரல் : தாரை சமாதானம் கூறியபின், இலக்குவனின் சீற்றம் தணிகின்றது. மாருதி இலக்குவன் அருகில் வருகின்றான்.

"வன்துணை வயிரத் திண்தோள்

மாருதி மருங்கின் வந்தான்."" இலக்குவன்,

"வந்தடி வணங்கி நின்ற

மாருதி வதனம் நோக்கி அந்தமில் கேள்வி நீயும்

அயர்த்தனை யாகும் அன்றே முந்தின செய்கை." என்று அநுமனை நோக்கிச் சொல்ல, 'இயம்ப வல்லான் (பேசுதலில் வல்லவனான அநுமன்) கூறிய மறுமொழி ஆறு கவிகளில் நடைபெறுகின்றது. இங்கும் வள்ளுவர் கூறும் சொலல் வல்லவன் (குறள் - 647) - சொல்லின் செல்வனைக் காணமுடிகின்றது.

"சிதைவுஅகல் காதல் தாயைத்

தந்தையைக் குருவைத் தெய்வப் பதவிஅந் தணரை ஆவைப்

பாலரைப் பாவை மாரை வதைபுரி குநர்க்கும் உண்டாம்

மாற்றலாம் ஆற்றல் மாயா உதவிகொன் றார்க்கொன் றேனும்

ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?" " என்று தொடங்கும் முதற்பாடலே கம்பீரமாகவும் பெருமிதமாகவும் தொடங்குகின்றது. தாய், தந்தை, ஆசான், குழவிக்கொலை, பெண் கொலை என்னும் கொடும் பாதகங்கட்கெல்லாம் கழுவாய் உண்டு; செய்ந்நன்றி மறத்தலுக்கு அது இல்லை என்று பேசுகின்றான்.

18. கிட்கிந்தை - கிட்கிந்தை - 60

19. கிட்கிந்தை - கிட்கிந்தை - 61.

20. கிட்கிந்தை - கிட்கிந்தை - 62. ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் (புறம்-9) என்ற பாடலின் கருத்தையும் ஈண்டுச் சிந்தித்து மகிழலாம்……………

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/36&oldid=1509385" இலிருந்து மீள்விக்கப்பட்டது