பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சொல்லின் செல்வன் 43

(வெய்ய கொடிய எல் - ஒளி, உயிர்கொடு - உயிர் கொண்டு; அல்லம் - அல்லோம்; போர் எடுத்து - போர்வகைகளைத் தொடங்கி)

'இங்கு வில் எடுத்துப் போர்செய்பவர்களும் இருக்கின்றார்கள். நீ இந்திரனை வென்றதாக நினைத்துச் செருக்கு கொண்டுள்ளாய். உன்னுடன் வில் எடுத்து வெய்து பொருபவர்களால் உனது வலியின்மை வெட்ட வெளிச்ச மாகும். அதனை இன்றோ நாளையோ காணலாம். நீ வில் வீரர்க்குத் தோற்று இறந்தவுடன் உனக்குக் கல் எடுத்தலாகிய சவச் சடங்கைப் புரிய உரியவனான வீடணனும் இங்கு உள்ளான் என்றும், உங்களோடு கல்லெடுத்து (மலை எடுத்து)ப் போர் புரிதற்கு உரிய யானும் (மற்றும் வானரர்களோடு) நின்றேன் என்றும் இருபொருள்படும். 'கல்லெடுப்பு என்று உலக வழக்கிலும் சவச்சடங்கைக் குறிப்பதை ஈண்டு நினைவு கூரலாம். இந்திரசித்தனைச் சார்ந்த மற்றையரக்கர் யாவரும் இறக்க, வீடணன் ஒருவனே எஞ்சி நிற்றலால், அரக்கனாகிய இந்திரசித்தனுக்குக் கல்லெடுக்கும் சடங்கைச் செய்தற்கு உரியவன் வீடணன் என்று கருதி இங்ங்னம் கூறினான் என்பது ஈண்டு அறியப்பெறும்.

இன்னும் பேசுகின்றான் : "என்னொ டேபொருதி யோஅது அன்று.எனின்

இலக்கு வப்பெயரின் எம்பிரான் தன்னொ டேபொருதி யோஉன் உந்தைதலை

தள்ள நின்றதனி வள்ளலாம் மன்னொ டேபொருதி யோஉ ரைத்தது

மறுக்கி லேம்என வழங்கினான் பொன்னொ டேபொருவின் அல்லது ஒன்றொடு

பொதுப்ப டாஉயர் புயத்தினான்."" (எம்பிரான் - எம் தலைவன், உந்தை தலை - உன் தந்தையின் தலைகளை; தள்ள - துணித்துத் தள்ள, நின்ற தனி வள்ளல் - வந்துள்ள ஒப்பற்ற இராமபிரான்; மறுக்கிலேம் - மறுக்கமாட்டோம் வழங்கினான் - கூறினான்; பொன் - மேருமலை, பொருவின் அல்லது

30. யுத்த - நாகபாசம் - 75