பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிந்தனைச் செம்மல் 49

"செல்வழி உள்ளத் தானும்

தெரிவுற எதிர்சென்று எய்திக் கவ்வையின்று ஆக துங்கள்

வரவெனக் கருணை யோனும் 'எவ்வழி நீங்கி யோய்நீ?

யார்?"என வினவல் உற்றான்" (16) இதற்குமேல் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நாம் அறிவோம். அநுமனது சிந்தனையோட்டத்தைமட்டிலும் ஈண்டுக் காட்டினேன்.

சிந்தனை 2 : பிராட்டியைத் தேடிக்கொண்டு அணுவின் மேருவின் ஆழியான் எனச் செலும் அநுமன் (ஊர்தேடு - 134) இலங்கை நகர் முழுதும் தேடிக்கொண்டு வருகின்றான். கும்பகர்ணன், வீடணன், இந்திரசித்து, மண்டோதரி, இராவணன் முதலியவர்களைக் காணும்போது, அநுமன் நமக்கு ஒரு சிந்தனைச் செம்மலாகக் காட்சி தருகின்றான். இந்நிலைகளைத் தனித்தனியாக நோக்குவோம்.

கும்பகருணன் : இயக்கியர்கள், அரக்கிமார்கள், நாக கன்னியர், வித்தியாதர மாதர்கள் முதலானவர்களையும் நன்றாகப் பார்த்துக்கொண்டு புகை புகாவாயிலும் புகவல்ல அநுமன், மலைபோல் படுத்து உறங்கும்

"கலக்கமில் துயிற்சிக் கும்ப

கருணனைக் கண்ணிற் கண்டான்."" (துயிற்சி - துக்கம்) இவனை அரக்கர்கோனோ - இராவணனோ - என்று ஐயுறுகின்றான், கோதில் சிந்தை அநுமன் (கிட்கிந்தை-29). சினம் தலைக்கேறுகின்றது.

"காவல் நாட்டங்கள் பொறிபுகக் கனல்எனக் கனன்றான்.""

3. கும்பகருணன் என்னும் வடமொழிப் பெயருக்குக் குடம்

போன்ற காதுகளையுடையவன் என்பது பொருள்.

4. கந்தர. ஊர்தேடு - 121

5. சுந்தர. ஊர்தேடு - 130