பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 அண்ணல் அநுமன்

(4) பிராட்டியைத் தேடுவதற்காகத் தென்திசை வந்த வானரர் கூட்டம் மகேந்திரமலை அடிவாரத்தில் தங்குகின்றது. அநுமன்தான் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லவேண்டும் என்ற முடிவு ஏற்படுகின்றது. அதுமன் வாணர வீரரிடம் விடைபெற்று மகேந்திரமலையின் உச்சிக்கு ஏகுகின்றான்; பெருவடிவு கொள்ளுகின்றான். இதனைக் கம்பன்,

"பொருவரு வேலை தாவும்

புந்தியான் புவனம் தாய பெருவடிவு உயர்ந்த மாயோன்

மேக்குறப் பெயர்ந்த தாள்போல் உருவறி வடிவின் உம்பர் ஓங்கினன்."" (பொருவுரு ஒப்பற்ற வேலை - கடல்; புவனம் - உலகம் தாள் - திருவடி) என்று கூறுவான். ஆகாயத்தை அளத்தற்காக உயர எடுத்த திரிவிக்கிரமனது திருவடி போல அநுமன் வானத்தை அளாவுமாறு பெருவடிவம் கொண்டனன் என்பதாக விளக்குவான். இராமாவதாரத்தில் திருமாலுக்கு வாகனமாக இருந்து உதவியதுபற்றி அநுமனுக்குத் திருவடி என்ற பெயர் ஏற்பட்டது. கவிஞன், திருவடி என்ற பெயர் யாவர்க்கும் தெரியுமாறு உயர்ந்து நின்றான் என்றான்.

அநுமன் இங்ங்னம் நின்ற நிலையைக் கவிஞன் மேலும்

விளக்குவது அற்புதம் பெருவடிவம் கொண்ட அநுமனது பாரம் அழுத்துதலால் மலை கீழே அழுந்தியது; அதன் சிகரங்கள் நொறுங்கின. அநுமனது வால் அவன் உடம்பைச் சுற்றிக்கொண்டு நின்றது. மகேந்திரமலை மகாகூர்மத் திற்கும், மகேந்திரமலைமேல் நின்ற அநுமன் மந்தர மலைக்கும், அநுமனது உடலைச் சுற்றிய அவனது வால் மந்தர மலையைச் சுற்றிய வாசுகி என்ற நாகத்திற்கும் ஒப்பாகின்றன என்று கவிஞன் விளக்குவது, கேட்போர்

உரைப்பார் போன்று இவ்வாறு வருணித்தனன் போலும் என்று கருதி மகிழலாம்.

1. கிட்கிந்தை. மயேந்திரப் - 26