பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 அண்ணல் அநுமன்

உய்ய தகுந்த காலம் என்று கருதித் திடீரென்று வானத்தில் எழுகின்றான், அநுமன்.

"வழுவுறு காலம் ஈதென்று

எண்ணினன், வலிதிற் பற்றித் தழுவினன், இரண்டு நூறா

யிரம்புயம் தடக்கை தாம்பொடு எழுஎன நால விண்மேல்

எழுந்தனன் விழுந்த எல்லாம்.""

என்ற டாடற்பகுதியில் அதன் விளைவைக் காண்கின்றோம்.

அநுமன் திடீரென்று மேலெழுந்தபோது அவனது பாசத்தை இருபுறத்தும் இருகூறாகப் பிரிந்து பற்றியிருந்த ஒர் இலட்சம் அரக்கர்களுடைய இரண்டு இலட்சம் கைகள் தனிப்பட்டுக் கயிற்றுடனே தொங்க, அவர்கள் தோளற்ற வர்களாய்க் கீழே விழுகின்றனர். இதில் அநுமனின் அற்புதமான நுண்ணுணர்வுள்ள வீரப்பண்பைக் கண்டு மகிழ்கின்றோம். இந்நிலையில் தோள்களோடு உடம்பையும் அழுந்தக் கயிற்றுடனே வானத்தில் காணப்பெறுகின்ற அநுமன்" சர்ப்பங்களால் பிடித்துச் சூழப்பெற்ற பெரிய திருவடிபோல் பொலிகின்றான்.

போர்வாலின் பொன்றாத செயல் : பகைவர்களை வளைத்தற்கும், எடுத்து வீசுவதற்கும் அடித்தற்கும் பலவாறு அநுமனது வால் உதவுவதால் அது போர்வால் என்று வழங்கப்பெறுகின்றது. அநுமன் தீயினால் பற்றி எரியும் வாலை இலங்கையின்மீது செலுத்துகின்றான். துணை வலியாகப் பலவற்றை உடன்கொண்டு சிவபெருமான் திரிபுரத்தை எரித்தனன். அப்பொருள்கள் யாவும் நாணமடையும்படி இப்பொழுது இராமபிரானைத் துதித்து இலங்கையை எரிப்பதாகச் சங்கல்பங்கொண்டு தன் வாலைச்

50. சுந்தர. பிணிவீட்டு - 133

51. அதுமனைச் சிறிய திருவடி என்றும் கருடனைப் பெரிய திருவடி என்றும் கொள்வது வைணவ மரபு. ஆதியஞ்சோதியாயுள்ள திருமாலுக்கு வாகனமாக இருப்பவன் பெரிய திருவடி (கருடன்) அவதாரத்தில் அவனுக்கு வாகனமாக இருப்பவன் சிறிய திருவடி (அதுமன்)