பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அஞ்சா நெஞ்சன் 95

அடிபட்டதனால் சிறிது தளர்கின்றான். அயர்ச்சி நீங்கியபின் மீண்டும் அவன் அம்புமாரி பொழிகின்றான்". அந்த அம்புகள் அநுமனது மார்பிலும் கைகளிலும் அழுந்த,

"கைத்த சிந்தையன் மாருதி நனிதவக் கனன்றான்; வித்த கன்சிலை விடுகணை

விசையினும் கடுகி அத்த டம்பெருந் தேரொடும்

எடுத்தெறிந்து ஆர்த்தான். (கைத்த - வெறுத்த நனிதவ - மிகமிக கனன்றான் - வெகுண்டான், வித்தகன் - இராமன்; விசை - வேகம்: கடுகி-வேகமாகப் பாய்ந்து தடப்பெரும் - மிகப்பெரிய, எடுத்து - துரக்கி; எறிந்து - வீசி)

இதனால் இந்திரசித்தன் தேருடன் வானத்தில் நெடுந்துாரம் சென்று கீழே விழுகின்றான். விழுந்தவன் எழ முயற்சி செய்ய, அநுமன் அவனது சேமத் தேர்களை யெல்லாம் அழித்தொழிக்கின்றான்."

  1. 3 & 8

பின்னர், இந்திரசித்து நான்முகன் கணையை ஏவக் கருதி, அதனைப் பூசித்து எடுத்து, அதனை அநுமன்மீது பிரயோகிக்கின்றான். அந்தக் கணை நாகவடிவாய் அநுமனது தடந்தோள்களைப் பிணித்துவிடுகின்றது. அவனும் தளர்ந்து சாய்கின்றான்." அதன் பின்னர் நடைபெற்ற வரலாற்றினை அறிவோம். அப்பொழுது அரசு வீற்றிருந்த இராவணன் நிலைமையின் சிறப்பைக் கூறும் பாடல்கள் பன்முறை படித்து அநுபவிக்கத் தக்கவை."

(8) வாலில் தீக்கொளுவப்பட்டபோது : இராவணன் கட்டளைப்படி அநுமனின் வாலில் தீக் கொளுவப்பெற்று அவனை இலங்காபுரி முழுவதும் சுற்றிக் காட்டுகின்றனர், அரக்கர்கள் - ஓர் இலட்சம் அரக்கர்கள் - அவனைப் பற்றிய வண்ணம் (124). ஊரின் இறுதியில் வந்ததும் இதுவே தப்பி

45. சுந்தர. பாசப். 43 - 50

46. கந்தர. பாசப். 51

47. சுந்தர. பாசப். 52, 53

48. சுந்தர. பாசப். 54 - 58 49. சுந்தர. பிணிவீட்டு - 38 - 55 (17 கவிகள்)