பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 14


வாழ்வதே நாம் இறைவனுக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும்! இத்தகைய நன்றியுணர்வோடு-

தனக்கென்று மட்டும் வாழாமல்; பிறர் நலனுக்காகவும்; நாட்டிற்காகவும்; உலகிற்காகவும் வாழ்ந்தவர்களையே, மகாத்மாக்களாகவும்; சாதனையாளர்களாகவும், தியாகிகளாகவும் உலகம் போற்றுகிறது.

இத்தகைய சான்றோர்களது வரலாறுகளை ஆழ்ந்து படிக்கும் போது -

அவர்கள் செய்கிற லட்சிய வாழ்க்கை; தியாக மனப்பான்மை ஆகியவை பாடமாக மனத்தில் பதிகின்றது.

இளம் வயதில் விதைகளாக நெஞ்சத்தில் விழும் இத்தகைய உயரிய சிந்தனைகள்-பின்னாளில் அவற்றில் நாட்டங் கொள்ளச் செய்து - சாதனைப் பூக்களாக மணம் பரப்ப வழிவகுக்கின்றன!

இளம் வயதில் காந்தி பார்த்த ஹரிச்சந்திரா நாடகம் - வாழ்க்கையில் இறுதிவரை சத்தியத்தை கடைப்பிடிக்கச் செய்து அவரை மகாத்மாவாக்கியது.

வழிவழியாக வந்த ஈகைக் குணமும் - இளம் வயது முதல், நெஞ்சிலே ஊற்றாகப் பெருகிக் கொண்டிருந்த தமிழ்ப் பற்றும், கல்விச் சிந்தனையுமே-

தமிழிசைச் சங்கம் தந்த தகையாளர் என்றும்-

பல்கலைக் கழகம் படைத்திட்ட ஒப்பற்ற மா மனிதர் என்றும்-