பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 449. வேருக்கு நீர்


மனிதன் எண்ணுகிறான்-

இறைவன் வழிநடத்திச் செல்லுகிறான் என்பதில் அசையா நம்பிக்கை கொண்டவர் அண்ணாமலைச் செட்டியார்.

பள்ளி நிர்வாகம் தன் கைக்கு வந்தபோது அண்ணாமலைச் செட்டியார் கல்லூரியைப் பற்றி எண்ணினார்.

கல்லூரிக் கனவு இனிதே நிறைவேறிய பின் இப்போது - அவரது எண்ணமெல்லாம் பல்கலைக் கழகத்தைப் பற்றியே இருந்தது.

கல்லூரி துவங்கிய போதே - பல்கலைக் கழகம் ஒன்று வேண்டும் என்கிற எண்ணம் அவர் மனத்தில் ஆழப் பதிந்து வேரூன்றி விட்டது. ஆயினும் -

வேருக்கு நீர் வார்த்தாற்போல் அவருடைய ஆழ் மனத்தில் கொண்டிருக்கும் ஆவலை; அவ்விரு பேரறிஞர்களும் பிரதிபலித்துக் கூறியபோது - அண்ணாமலைச் செட்டியார் தீவிரமாகச் செயலில் இறங்கினார்.

பல்கலைக் கழகம் நிறுவுவதற்கு வேண்டிய திட்டங்களை வரையத் துவங்கினார்.