பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 60எங்கு அவர் இருந்தாலும் -

எவ்வாறான பணியில் ஈடுபட்டிருந்தாலும், அவரது சிந்தனையெல்லாம், பல்கலைக் கழகத்தைப் பற்றியே இருக்கும்.

பல்கலைக் கழகத்தின் வளர்ச்சி, அதன் விரிவாக்கம் ஆகியவையே அவரது பெரு விருப்பமாகும்.

ஒரு பல்கலைக் கழகம் விரிவாக்கப்படுவதற்கும், அதன் நோக்கம் நிறைவேறுவதற்கும், அப்பல்கலைக் கழகம் போதுமான நிதிநிலையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதனை அவர் உணர்ந்திருந்தார்.

பொருளாதார நிலையில் உறுதிப்பாடுடன், வலுவான அடிப்படையில் அதனை அமைக்க வேண்டும், என்ற அவரது நோக்கம் மகிழ்வாக நிறைவேற்றப்பட்டது.

அரசர் அவர்களால், ஓர் அறக்கட்டளையோ, பிறவோ அமைக்கப்படாமல் எந்த ஒரு ஆண்டும் முடியவில்லை.

பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த சான்றோர்களின் பெயரால் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்க ஏற்பாடுகள் செய்தார்.

ராஜா, தம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்து, “என் உள்ளமும் உயிரும் அண்ணாமலை நகரில் இருக்கிறது”- என்று எழுதியிருக்கும் வரியினை, பேராசிரியர் எம்.எஸ். துரைசாமி அவர்கள் எடுத்துக் காட்டினார்.

★★★