பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 66இங்கிலாந்து மன்னர் “பிரான்”, மட்டற்ற மகிழ்ச்சியுடன், வழிவழியாக வரும் “ராஜா” என்னும் பட்டத்தினை 3.3.1929-அண்ணாமலைச் செட்டியாருக்கு வழங்கினார்.

அதுவரை சர். அண்ணாமலைச் செட்டியார் என்று அழைக்கப்பட்டவர் 4.3.1929 முதல், ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் என்று, அனைவராலும் மகிழ்ச்சியுடன் அழைக்கப்பட்டார்.

அண்ணாமலைச் செட்டியார் “ராஜா” பட்டம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் -

நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ராஜா சர். முத்தையா செட்டியார் அவர்களுக்கு கானாடு காத்தானில் மிகச் சிறப்பானதொரு வரவேற்பளித்து - இதனை, “பொது தொண்டிற்கு கிடைத்த பரிசு” என்று பாராட்டிப் பேசினார்கள்.

கோவிலூரில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு, வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார் தலைமை தாங்கி பேசினார்.

அண்ணாமலைச் செட்டியாரின் தொண்டைப் பாராட்டி, “வரலாற்றில் இடம்பெறும் உயர்ந்த பணி” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, பல ஊர்களிலிருந்தும் ராஜா. சர். அண்ணாமலைச் செட்டியாருக்கு அழைப்பு விடுத்து பாராட்டு விழாக்கள் நடந்து கொண்டிருந்தன.