பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருஷ்ண லீலா

9



“பெரிய கேள்வி கேட்டுவிட்டாய் போடி! கிரீஸ் நாட்டுக் கதை, அதைத் தமிழிலே யோகானந்த சாரதியார் மொழி பெயர்த்திருக்கிறார்”

“யோகானந்த சாரதியார், காதல் கதையைத்தானா மொழி பெயர்க்க வேண்டும். வேடிக்கைத்தான், கதையைச் சொல்லு”

“கிரீஸ் நாட்டிலே ஒரு ஊரிலே, அதிசயம் என்ற ராஜகுமாரி ஒருவள் இருந்தாள். அவள் நல்ல அழகி. உன்னைப் போல என்று வைத்துக் கொள்ளேன். ஆனால் உனக்கு இருப்பதுபோல, கிளிமூக்கு இல்லை அவளுக்கு?”

“ஏண்டி! நீ கதை சொல்லப் போகிறாயா. உதை வாங்கப் போகிறாயா?”

“கதைதாண்டி சொல்கிறேன். அதிசயத்தை வர்ணிக்க வேண்டாமா, அழகான பெண் என்று இரண்டே எழுத்துக்களிலேயே முடித்து விடுகிறார் கதை எழுதியவர். ஆறு பக்கமோ ஏழு பக்கமோ எழுதியிருக்கிறார். படித்தால்தானே தெரியும் உனக்கு. கார் நிறக் கூந்தல், கமலக் கண்கள், வில் போன்ற புருவம், இன்னம் எல்லா அழகும் என்று வைத்துக் கொள்ளேன், அவளைக் கலியாணம்செய்து கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன”

“சரி பழைய கதைதான், பெற்றோர்கள் ஒரு இடம் பார்த்திருப்பார்கள். இவளுக்கு வேறு ஒருவன் மீது காதல் இருக்கும், இதனாலே வீட்டிலே சண்டை பிறந்திருக்கும், அவள் அழுதிருப்பாள், அதுதானே”

“அவள் அழுதாள், சண்டை நடந்தது அதெல்லாம் கதையிலே உள்ளதுதான். ஆனால், அரண்மனையிலே சண்டை நடந்தது, நீ சொல்கிறபடி அல்ல. அதுதான், அந்தக் கதையை அற்புதமான கதை என்று நான் சொன்னேன். அதிசயத்தை, அவளுக்கு இஷ்டமான புருஷனைக்